Telegram பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய வசதி அறிமுகம்!
சமூக வலைத்தளங்களில் ஒன்றான Telegram தனது பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் Telegram பயனர்களுக்கு அப்டேட் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Telegram அப்டேட்:
தற்போதைய கால கட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் அதிகரித்து விட்டன. நாளுக்கு நாள் புதுப்புது செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. புதிய செயலிகளுக்கு பயனாளர்கள் அதிகரித்து வருவதால் அந்நிறுவனங்கள் அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. எளிதாகவும் பயனர்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறும் அமைந்து விடுகிறது. வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற முன்னணி சமூக வலைத்தளங்களும் அவ்வப்போது பயனர்களுக்காக புது அப்டேட்களை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் செப்.7 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!
அதனை தொடர்ந்து தற்போது டெலிகிராம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. டெலிகிராம் குரூப் வீடியோ கால் வசதி பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது நேரடி ஒளிபரப்பு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு வசதி செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதில் டெலிகிராம் தனது கால்தடத்தை பாதித்துள்ளது. புதிய அப்டேட் ஆன 8.0 வில் இந்த வசதி பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.
Manchester United நம்பர் 7 ஜெர்சியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ – ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்த அப்டேட் மூலம் ஒரே நேரத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் இணைப்பில் இணைந்து கொள்ள முடியும். தற்போது பயனர்கள் அதிகம் பயன்படுத்தி வரும் ‘கிளப் ஹவுஸ்’ செயலியை போலவே ஒளிபரப்பு தொடங்கிய பின் அதில் இணைத்து கொள்ளலாம். நேரடி ஒளிபரப்பில் பேச விரும்புபவர்கள் ரைஸ் என்னும் வசதியை பயன்படுத்தி பேசலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் புதிய எமோஜி ஸ்டிக்கர்கள் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்டேட் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.