Whatsapp பயனர்களுக்கான நியூ அப்டேட் – இனி குரூப் சாட் ரொம்ப ஈஸி!

0
Whatsapp பயனர்களுக்கான நியூ அப்டேட் - இனி குரூப் சாட் ரொம்ப ஈஸி!
Whatsapp பயனர்களுக்கான நியூ அப்டேட் - இனி குரூப் சாட் ரொம்ப ஈஸி!
Whatsapp பயனர்களுக்கான நியூ அப்டேட் – இனி குரூப் சாட் ரொம்ப ஈஸி!

உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப்பில் தினந்தோறும் புதிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் சாட்கள் குறித்து வந்துள்ள அம்சம் குறித்து இப்பதிவில் காண்போம்.

வாட்ஸ் அப்:

தற்போது பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் தேவையை கருத்தில் கொண்டு மெட்டா நிறுவனம் புதிய அப்டேட்களையும் சேவைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் குறித்து புகார் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் விதிகளை யாரேனும் மீறும் பட்சத்தில் அது தொடர்பாக சக பயனர்களே புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அம்சம் தற்போது டெக்ஸ்டாப் பீட்டா வெர்ஷனில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைவருக்கும் அதாவது ஆண்ட்ராய்டு மட்டும் IOS பயனர்களுக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர், அமைச்சர்கள் ஊழல் தடுப்பு விசாரணை ஆணையம் – மசோதா நிறைவேற்றம்!

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப்பின் குரூப் சாட்டில் ‘செலக்ட் சாட்’ என்ற விருப்பம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் குரூப்பில் நீங்கள் ஏதேனும் ஒருவரின் Chat – டை தேர்ந்தெடுத்து அதனை பிளாக் செய்ய முடியும். மேலும் அதனை பார்க்காதவாறு குறிப்பிடவும் முடியும். இந்த அம்சம் வரும் 2023ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!