Facebook, Insta-வை தொடர்ந்து வாட்ஸ் அப்பில் வரவுள்ள புது அம்சம் – இனி Profile Picture கவலை இல்லை!

0
Facebook, Insta-வை தொடர்ந்து வாட்ஸ் அப்பில் வரவுள்ள
Facebook, Insta-வை தொடர்ந்து வாட்ஸ் அப்பில் வரவுள்ள

Facebook, Insta-வை தொடர்ந்து வாட்ஸ் அப்பில் வரவுள்ள புது அம்சம் – இனி Profile Picture கவலை இல்லை!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் Whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நிறுவனம் தங்களின் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வப்போது பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வரவுள்ள புதிய அம்சம் குறித்து இப்பதிவில் காண்போம்.

புதிய வசதி:

வாட்ஸ் அப், பயனர்களுக்கு உதவும் வகையில் புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அண்மையில் இன்ஸ்டாகிராம் செயலியை போன்று எமோஞ்சிகள் கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து நீங்கள் அனுப்பும் மெஜேசை யாரும் பார்க்காத வண்ணம் டெலிட் செய்யலாம் என்ற வசதி வழங்கப்பட்டது. தற்போது வாட்ஸ் அப்பில் ஆடியோ அல்லது வீடியோ கால் லிங்குகளை கூட உருவாக்க முடியும். அதுமட்டுமல்ல, அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும் வசதியும் வரவுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அண்மையில் வாட்ஸ் அப் குழுவின் உறுப்பினர்களின் அதிகபட்ச வரம்பை இரண்டு மடங்காக வாட்ஸ் அப் உயர்த்தியுள்ளது.அதன்படி தற்போது வாட்ஸ் அப் குழுவில் 1,024 உறுப்பினர்கள் வரை சேர்க்க முடியும். அதனை தொடர்ந்து புதிய அம்சமாக பேஸ்புக், இன்ஸ்டாகிராமை போல வாட்ஸ் அப்பில் அவதார் உருவம் கொண்டு வரப்பட உள்ளது. தற்போதைக்கு இது சோதனை அடிப்படையில் சில பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

வாட்ஸ் அப்பில் உங்களின் அவதார் உருவத்தை நீங்கள் கட்டமைத்த பிறகு வாட்ஸ்அப் புதிய ஸ்டிக்கர் பேக்கை உருவாக்கும் அதனை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். மேலும் வாட்ஸ் அப்பில் உங்கள் சுயவிவரப் படமாக (Profile photo) கூட நீங்கள் அவதாரை தேர்வு செய்யலாம். அதற்கு WhatsApp பீட்டா பயனர்கள் செட்டிங்கில் “அவதார்” என்ற புதிய பிரிவை தேர்வு செய்ய வேண்டும். அதில் உங்களின் அவதார் உருவத்தை உருவாக்கத் தொடங்கலாம்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!