WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – சிறப்பம்சத்துடன் புதிய அப்டேட்!
வாட்ஸ்அப் நிறுவனம் தனியுரிமை அம்சங்களை மேம்படுத்தும் முயற்சியில், பயனரின் ‘Last Seen’ அமைப்பை பயனர்களின் தொடர்பு பட்டியலில் இல்லாதவர்களிடம் இருந்து தானாகவே மறைக்கும் வகையில் புதிய அப்டேட் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய அப்டேட்:
வாட்ஸ்அப் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள தனது பயனர்கள் சிறப்பான அனுபவத்தை உணரும் வகையில் புதிய அம்சங்களுடன் உள்ள புதுப்பிப்புகளை அடிக்கடி அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் பயனர்கள் புதுப்புது அம்சங்களை பயன்படுத்தி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், வாட்ஸ்அப் மற்றொரு தனியுரிமையை மையமாக கொண்ட அம்சத்தை புதிய அப்டேட் ஆக வெளியிட்டுள்ளது. அதன் தனியுரிமை அம்சங்களை மேம்படுத்தும் முயற்சியில் வாட்ஸ்அப் பயனரின் ‘Last Seen’ நேரத்தை அவர்களின் தொடர்பு பட்டியலில் இல்லாதவர்களிடம் இருந்து தானாகவே மறைக்கும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 23 நாட்கள் விடுமுறை – 2022 ஆம் ஆண்டிற்கான பட்டியல் இதோ!
அதாவது, அறிமுகம் இல்லாத நபர் அல்லது தெரியாத எண் உங்களுக்கு WhatsAppல் செய்தி அனுப்பியிருந்தால், கடைசியாக நீங்கள் ஆப்பில் ஆன்லைனில் இருந்த நேரத்தை அவர்களால் பார்க்க முடியாது. ‘Last Seen’ நேரத்தை கட்டுவது என்பது வாட்ஸ்ஆப்பின் முக்கிய அம்சமாகும். பயனர்கள் தங்கள் விருப்பப்படி ‘Last Seen’ அமைப்பை அமைக்கும் விருப்பத்தை வழங்குகிறது. இதில் தேர்வு செய்வதற்கு அனைவரும் எனது தொடர்புகள் மற்றும் யாருக்கும் இல்லை என்பது போன்ற மூன்று விருப்பங்கள் இருந்தது. ஆனால் இனி, “அனைவருக்கும்” என்ற அமைப்பு இல்லாமல், “எனது தொடர்புகள்” என அமைக்கப்படும் என WABetaInfo தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டிச.18 வரை மழைக்கு வாய்ப்பு, மீனவர்களுக்கான எச்சரிக்கை – வானிலை அறிக்கை!
மேலும், புதிதாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்சத்தின் படி அனைத்து புதிய சாட்களிலும் பயனர்கள் மறைந்து வரும் செய்திகளை இயல்பாக இயக்கலாம். அனைத்து புதிய மெசேஜ்களும் நீங்கள் தேர்ந்தெடுத்த காலப்பகுதியில் மறைந்துவிடும். குரூப் மெசேஜ் உருவாக்கும் போது வாட்ஸ்அப் புதிய விருப்பத்தைச் சேர்த்துள்ளது. இது தவிர, மறைந்திருக்கும் செய்திகளுக்கு மேலும் இரண்டு கால அவகாசங்களை WhatsApp சேர்க்கிறது. வாட்ஸ்அப்பில் செய்திகளை தானாக நீக்குவதற்கு பயனர்கள் 24 மணிநேரம், ஏழு நாட்கள் மற்றும் 90 நாட்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். மேலே குறிப்பிட்டுள்ள விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க, WhatsApp மொபைல் பயன்பாட்டில் உள்ள தனியுரிமை அமைப்புகளுக்குச் சென்று, ‘Default Message Timer’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.