மொபைல் எண் இல்லாமல் ஆதார் கார்டு அப்டேட் செய்ய புதிய வசதி – UIDAI அறிமுகம்!

0
மொபைல் எண் இல்லாமல் ஆதார் கார்டு அப்டேட் செய்ய புதிய வசதி - UIDAI அறிமுகம்!
மொபைல் எண் இல்லாமல் ஆதார் கார்டு அப்டேட் செய்ய புதிய வசதி - UIDAI அறிமுகம்!
மொபைல் எண் இல்லாமல் ஆதார் கார்டு அப்டேட் செய்ய புதிய வசதி – UIDAI அறிமுகம்!

நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான முக்கிய ஆவணங்களில் ஆதார் அட்டை முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் புதிய விவரங்களை அப்டேட் செய்யும் வசதியை UIDAI வழங்கி இருக்கிறது.

ஆதார் அட்டை அப்டேட்:

இந்திய குடிமக்கள் அனைவரும் ஆதார் அடையாள அட்டையை வைத்திருப்பது கட்டாயம் ஆகும். வங்கி கணக்கு தொடங்குவது முதல், ஒரு சிம் கார்டு வாங்குவது வரை ஆதார் அட்டை இருப்பது கட்டாயமாக உள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வாக்காளர் அட்டையும் ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய முக்கியமான ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

அவ்வாறு அதில் மாற்றம் எதாவது இருந்தால் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை உடனே அப்டேட் செய்ய வேண்டும். ஆதார் அட்டையில் விவரங்களை ஆன்லைன் மூலமாக எளிதில் அப்டேட் செய்யலாம். ஆனால் மொபைல் நம்பரை அப்டேட் செய்வதற்கும் புகைப்படத்தை மாற்றுவதற்கு மட்டும் ஆதார் சேவை மையத்துக்கு செல்ல வேண்டும். ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண் என்பது முக்கியமானதாகும். அந்த நம்பர் இல்லாமல் உங்களால் ஆதார் விவரங்களை அப்டேட் செய்ய முடியாது.

TN TET தேர்வர்களுக்கு குறைந்த நாட்களில் சிறந்த பயிற்சி வகுப்புகள் – குறைந்த கட்டணம் மட்டுமே

இந்நிலையில் தற்போது மொபைல் எண் இல்லாமல் ஆதார் விவரங்களை அப்டேட் செய்யும் வசதியை ஆதார் அமைப்பு (UIDAI) ஏற்படுத்தியுள்ளது. அதாவது எந்தவொரு மொபைல் நம்பரை வைத்தும் இனி ஆதார் கார்டில் அப்டேட் செய்யலாம். ஆதார் கார்டில் அப்டேட் செய்யும்போது மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரைப் பதிவிட வேண்டியிருக்கும். மேலும் ஒரே மொபைல் நம்பரை வைத்து குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதார் கார்டிலும் அப்டேட் செய்ய முடியும். ஆதார் ஆதண்டிகேசனுக்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!