தமிழகத்தில் ரேஷன் கடை திறப்பு பற்றி அறிய புதிய வசதி – முக்கிய தகவல் வெளியீடு!

0
தமிழகத்தில் ரேஷன் கடை திறப்பு பற்றி அறிய புதிய வசதி - முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் ரேஷன் கடை திறப்பு பற்றி அறிய புதிய வசதி - முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் ரேஷன் கடை திறப்பு பற்றி அறிய புதிய வசதி – முக்கிய தகவல் வெளியீடு!

தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களை சென்றடைகின்றன. இந்நிலையில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் குறித்து மக்கள் மத்தியில் குழப்ப நிலை இருக்கிறது. மேலும் ரேஷன் கடைகளில் பொருள்கள் இருக்கிறதா என்பது குறித்து மக்கள் வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள்:

மக்களின் அத்தியாவசிய தேவைகளான சமையல் பொருள்களை மலிவு விலையில் கீழ் வழங்க ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் பல இடங்களில் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றனர். இதில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை ஆகியவை மலிவு விலையில் வழங்கப்படுகின்றன. மேலும் அரசு வழங்கும் பல நலத்திட்ட நிதியுதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்படுகின்றன.

Exams Daily Mobile App Download

அது மட்டுமில்லாமல் தற்போது தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டு இருப்பதால் மக்கள் எங்கே இருந்தாலும் கை ரேகை மூலமாக ரேஷன் பொருள்களை வாங்கி கொள்ளலாம். ஆனால் ரேஷன் கடைகளில் வரிசையில் நிற்பது பலருக்கு சிரமமான ஒன்றாக இருக்கிறது. மேலும் ரேஷன் கடைகள் திறந்து இருக்கிறதா என தெரியாமல் அலைந்துவிட்டு வரும் நிலைமையும் இருக்கிறது. அதனை சரி செய்ய ரேஷன் கடை பயனாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூடுதலாக 10,300 ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் பேட்டி

அதன் படி ரேஷன் கடைகள் குறித்து தகவல்களை உங்களது மொபைல் எண் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். ரேஷன் கடைகள் திறந்து இருக்கிறதா அதில் என்ன பொருள்கள் இருக்கிறது என தெரிந்து கொள்ள, நீங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 9773904050 என்ற எண்ணிற்கு ‘PDS 101’ என டைப் செய்து அனுப்பினால் ரேஷன் கடைகளில் உள்ள பொருள்களின் விவரங்கள் மெசேஜ் வரும். அதே போல 9773904050 என்ற எண்ணிற்கு ‘PDS 102’ என மெசேஜ் செய்தால் கடை திறந்திருக்கிறாதா என்ற விவரம் தெரிய வரும். ‘PDS 107’ என டைப் செய்து 9773904050 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்தால் ரேஷன் கடை குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!