தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கான புதிய வசதி – அறிவிப்பு வெளியீடு!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கான புதிய வசதி - அறிவிப்பு வெளியீடு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கான புதிய வசதி - அறிவிப்பு வெளியீடு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கான புதிய வசதி – அறிவிப்பு வெளியீடு!

தமிழக ரேஷன் கடைகள் மூலம் அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய திட்டம் ஒன்று அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் ஏராளமான மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஷன் கடை:

தமிழகத்தில் மாநில அரசால் வழங்கப்படும் ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் ரேஷன் கடைகள் மூலம் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். இந்த அறிவிப்பை அடுத்து ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் நவீன தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்றவாறு ரேஷன் கடைகளை மாற்ற அரசு முயற்சித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு, ‘பி.எம்.வாணி’ திட்டத்தின் கீழ் மக்களுக்கு இணையதள சேவை வழங்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் சுமார் 35,000 ரேஷன் கடைகளில் ‘WIFI’ வசதி ஏற்படுத்தி, அந்த கடைக்கு அருகில் இருப்போருக்கு இணையதள சேவை வழங்கப்பட உள்ளது. இதன் முகாம் அப்பகுதி மக்கள் மொபைல் போன், ‘லேப்டாப்’ எடுத்து வந்து இணையதள சேவைகளை பயன்படுத்தலாம். இந்த சேவை பயன்படுத்துவோர், குறிப்பிட்ட தொகையை ரேஷன் கடைகளுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும்.

மதுரையில் தேர்வில்லாமல் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.90,000/-

இந்த புதிய திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக இட வசதியுடன் கூடிய சொந்த கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளில், இத்திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது. விரைவில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் இனி எளிதாக இணைய வசதி கிடைக்கும் என்கின்றனர். மேலும் இணைய சேவை வழங்கும் பொது தரப்பு மையமாக ரேஷன் கடை மாற வாய்ப்புள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!