தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு புது வசதி – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

0
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு புது வசதி - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு புது வசதி - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு புது வசதி – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக தொடர்ந்து பல நலத்திட்டங்களை செய்து வரும் நமது தமிழக அரசு தற்போது இன்னும் வளர்ச்சி அடையாத சில பள்ளிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாக புது முயற்சியில் இறங்கியுள்ளது. அதற்கான முழு அப்டேட்டுகளும் கீழ் வருவன.

புதிய வசதி

அன்றைய காலகட்டத்தில் பள்ளிக்கூட கட்டிடங்கள் எல்லாம் வருவதற்கு முன்னாக நமது தாத்தா பாட்டி அவர்கள் எல்லாம் ஒரு அழகான வெட்டவெளியில், மரத்தின் நிழலில் அமர்ந்து கருநிற பலகையில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை கவனித்து படித்து வாழ்க்கையில் முன்னேறி இன்று வரை நமக்கெல்லாம் ஒரு முன்னோடியாக திகழ்கிறார்கள். இதெல்லாம் நினைக்கும் போதே மனதுக்குள் தித்திக்கும் தருணங்களாக இருக்கும். ஆனால் அன்று இருந்தது போல இன்றும் எல்லாமே இருக்க வேண்டும் என்ற ஆசை சிலரது மத்தியில் இருந்தாலும் அது சாத்தியமல்ல.

Exams Daily Mobile App Download

ஏனென்றால் கல்வியின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க நாட்டின் வளர்ச்சியும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இவ்வாறு மரத்தடியில் கற்ற கல்வி தான் இன்று பள்ளி கூடங்களில் கட்டிடம் எழும்பும் அளவிற்கும், மின் சாதனங்களுக்கு நடுவில் ஸ்மார்ட் போர்டு வகுப்பறையில் படிக்கும் காலகட்டத்திற்கு நாம் அனைவரையும் நகர்த்தி கொண்டு வந்துள்ளது. இப்படியிருக்கையில் இன்னும் சில நகரங்களில் டெக்னாலஜி வளராமல் அதே நிலையில் தான் பல மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு புது முயற்சியை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

அதாவது சேலத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளி கட்டிடம் குறித்து சிலவற்றை பேசியுள்ளார். அதில், தமிழகம் முழுவதும் 10,031 அரசு பள்ளிகள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும், விரைவில் முதல்வர் தலைமையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இதற்காக இந்த ஆண்டு ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!