SBI வாடிக்கையாளர்களுக்கான புதிய வசதி – தகவல் வெளியீடு!

0
SBI வாடிக்கையாளர்களுக்கான புதிய வசதி - தகவல் வெளியீடு!
SBI வாடிக்கையாளர்களுக்கான புதிய வசதி - தகவல் வெளியீடு!
SBI வாடிக்கையாளர்களுக்கான புதிய வசதி – தகவல் வெளியீடு!

வங்கி தொடர்பான அனைத்து முக்கியப் பணிகளையும் எஸ்பிஐ வங்கியே கவனித்து வந்தாலும், சில நேரங்களில் அதே பணிகளின் எளிமையான செயல்பாட்டிற்கான தேவையும் அதிகரித்துள்ளது. அதற்காகவும், வாடிக்கையாளர்கள் வசதிக்காகவும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வங்கி தொடர்பான பல சேவைகளை வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ள புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

புதிய வசதி:

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. அந்த வகையில் அதிமான வாடிக்கையாளர்களைக் கொண்ட வங்கியாக திகழ்கிறது. மேலும் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கிய உந்துதலுடன், எஸ்பிஐ (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளுக்கான போர்டல்களை வழங்குகிறது. இன்னும் சொல்லப்போனால் ஒரு எஸ்பிஐ வாடிக்கையாளர் எளிமையாக பல வங்கி தொடர்பான பணிகளைச் செய்யலாம் என்று முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

அதாவது, பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள், ஒரே டயலில் வீட்டில் இருந்தபடியே வங்கி தொடர்பான பல சேவைகளை இப்போது பெறலாம். இதற்கு வாடிக்கையாளர் SBI-யின் தொடர்பு மையத்தை அழைக்க வேண்டும். தற்போது எஸ்பிஐ 1800 1234 மற்றும் 1800 2100 ஆகிய இரண்டு புதிய தொடர்பு எண்களைப் பகிர்ந்துள்ளது. இந்த வசதி வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்கும். இதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளுக்கு வங்கியில் இருந்து உதவி கிடைக்கும். இதற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து எஸ்பிஐ எந்த கட்டணத்தையும் வசூலிப்பதில்லை.

  • எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஒரே ஒரு அழைப்பின் மூலம் தங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்க முடியும். இதனுடன், அவர்களின் கடைசி ஐந்து பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களையும் பெறுவார்கள்.
  • உங்கள் டெபிட் / கிரெடிட் கார்டு திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக மூடப்பட வேண்டியிருந்தாலோ, வீட்டில் இருந்தபடி இந்த எண்ணை டயல் செய்து அதை மிக எளிதாகத் பிளாக் செய்யலாம்.
  • எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களுக்கான புதிய காசோலை புத்தகத்தை வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்யலாம் மற்றும் அதன் நிலையை கண்காணிக்கலாம்.
  • மேலும் TDS அல்லது டெபாசிட் வட்டிச் சான்றிதழை வீட்டில் இருந்தபடியே மின்னஞ்சல் மூலம் பெறலாம். இதற்கு நீங்கள் எஸ்பிஐயின் தொடர்பு மையத்தை அழைக்க வேண்டும்.
  • எஸ்பிஐயின் தொடர்பு மையத்தை அழைத்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கான புதிய ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!