IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்!

1
IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் கவனத்திற்கு - புதிய வசதி அறிமுகம்!
IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் கவனத்திற்கு - புதிய வசதி அறிமுகம்!
IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்!

இந்திய பொது போக்குவரத்தில் ஒன்றான ரயில் போக்குவரத்து பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது IRCTCயில் முன்பதிவு செய்பவர்களுக்கு மேலும் சில கூடுதல் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது மொபைல் நம்பர் சேவை அறிமுகம் செய்துள்ளது. தற்போது எந்ததெந்த சேவையை பெற எந்த எண்ணைப் பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்.

மொபைல் நம்பர் சேவை

இந்தியாவில் ரயில் போக்குவரத்து சேவை சாதாரண மக்களுக்கு கிடைக்கும் வகையில் மிகவும் மலிவான விலையில் தனது சேவையை வழங்கி வருகிறது. அதனால் ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா கால கட்டத்தில் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அமல்படுத்தியது. அத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் தற்போது முன்பதிவில்லா சேவையை ரயில்வே வாரியம் தொடங்கியுள்ளது.

ஏப்ரல் 19 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – கொரோனா பரவலை தடுக்க அதிரடி அறிவிப்பு!

இதனை தொடர்ந்து இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC) இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்நிறுவனம் பயணிகளுக்கு உணவு வழங்கல், இணையவழி பயணச்சீட்டு பதிவு, சுற்றுலா மேலாண்மை உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பயணிகளுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி 139 என்ற மொபைல் நம்பர் சேவை அறிமுகம் பயணிகளுக்கு செய்துள்ளது.

தற்போது எந்தெந்த நம்பரை பயன்படுத்தி எந்த தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்று விரிவாக பார்ப்போம்.

1. முதலாவதாக PNR விசாரணை தெரிந்து கொள்ள, “PNR <10 இலக்க PNR எண்>” என்று டைப் செய்து 139 க்கு SMS செய்ய வேண்டும். அதாவது PNR 1234567890 என்று டைப் செய்ய வேண்டும்.

2. அடுத்ததாக தங்குமிடத்தை பற்றி தெரிந்து கொள்ள, ” SEAT<ரயில் எண் > <DOJ** ddmmyy> <Station from:STD code> <station to:STD code>class><quota>***” என்பதை டைப் செய்து 139 க்கு SMS செய்ய வேண்டும். அதாவது SEAT 12561 020611 0542 0571 SL G என்று டைப் செய்ய வேண்டும்.

3. இதையடுத்து ரயில் வருகை மற்றும் புறப்படும் நேரத்தை பற்றி அறிய, ” “AD<ரயில் எண்> < நிலைய STD குறியீடு>” என்று டைப் செய்ய வேண்டும். அதாவது AD 12859022 என்றவாறு டைப் செய்து 139 என்ற எண்ணுக்கு SMS செய்ய வேண்டும்.

4. மேலும் கட்டணத்தை பற்றி அறிய “FARE<ரயில் எண்> <DOJ** ddmmyy> <ஆரம்ப ஸ்டேசன்: STD குறியீடு> <முடியும் ஸ்டேசன்: STD குறியீடு> <வகுப்பு> <கோட்டா>***” என்று டைப் செய்து 139 என்ற எண்ணுக்கு SMS மூலம் அனுப்ப வேண்டும். இதனை 12561 020611 0542 0571 SL G என்றவாறு டைப் செய்ய வேண்டும்.

5. ரயிலின் பெயர்/எண் பற்றிய தகவல்களை அறிய “TN<ரயில் பெயர்> அல்லது TN< ரயில் எண்>” என்று டைப் செய்து 139க்கு SMS செய்ய வேண்டும்.

6. ரயில் நேர அட்டவணையை பற்றி அறிய “TIME<ரயில் எண்> டைப் செய்து 139 என்ற எண்ணுக்கு SMS மூலம் அனுப்ப வேண்டும். அதாவது TIME 14034 என்று கொடுக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!