வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளுக்கு புதிய விதிகள் – ஏப்ரல் 1, 2022 முதல் அமல்!

0
வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளுக்கு புதிய விதிகள் - ஏப்ரல் 1, 2022 முதல் அமல்!
வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளுக்கு புதிய விதிகள் - ஏப்ரல் 1, 2022 முதல் அமல்!
வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளுக்கு புதிய விதிகள் – ஏப்ரல் 1, 2022 முதல் அமல்!

வருங்கால வைப்பு நிதி செலுத்தும் மாத ஊதியதாரர்கள், 2.50 லட்சம் ரூபாய்க்கு குறைவாக ஆண்டு சந்தா மற்றும் அதற்கு மேல் செலுத்துபவர்கள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த செயல்முறை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.

PF நிதி

மாத ஊதியம் வாங்கும் அனைத்து ஊதியதாரர்களும் செலுத்தும் வருங்கால வைப்பு நிதி, அவர்களின் ஓய்வூதிய காலத்திற்கான சிறந்த சேமிப்பாக கருதப்படுகிறது. இந்த PF கணக்குகளுக்கு அந்தந்த நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை ஊழியர்கள் சார்பில் அளித்து வருகிறது. தற்போது இந்த சேவையில் சில திருத்தங்களை செய்து, மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் புதிய திருத்தங்களை அறிவித்தது.

தமிழ்நாடு நலவாழ்வு சங்க வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.16,500/-

இந்த புதிய திருத்தத்தின் படி , மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஆண்டு தோறும் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் செலுத்தப்பட்டு இருந்தால் அதற்கு வரி விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு அறிவித்த புதிய திருத்தங்களை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொழிலாளர் சேம நல நிதிய சந்தாதாரர் கணக்கை இரு வகையாக பராமரிப்பதற்காக வழிகாட்டுதல்களை அரசு குறிப்பிட்டுள்ளது.

Tokyo Paralympics High Jump – வெள்ளி வென்றார் இந்திய வீரர் பிரவீன் குமார்!

அதன் கீழ், ‘தொழிலாளர் சேம நல நிதியத்தில், மாத சம்பளம் பெறும் ஒவ்வொரு ஊழியர்களும் குறிப்பிட்ட அளவு தொகையை செலுத்தி வருகின்றனர். ஊழியர்களின் சார்பில் அந்தந்த நிறுவனங்களும் ஒரு தொகையை செலுத்துகிறது. தற்போது ஊழியர்கள் செலுத்தும் இந்த தொகை இரு பிரிவுகளாக பராமரிக்கப்பட உள்ளது. அந்த வகையில் ஒரு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு கீழ், சந்தா செலுத்துபவர்கள் ஒரு பிரிவாகவும், ரூ.2.5 லட்சத்துக்கு மேல் செலுத்துபவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட உள்ளனர்.

செப்.16 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இதன் மூலம் ஒருவர் செலுத்தும் தொகையை வைத்து, அவர் பெறும் மாத ஊதியம் வரி செலுத்தும் பிரிவுக்கு உட்பட்டதா என்பதை கண்டறிய முடியும். இதன் மூலம் ரூ. 2.50 லட்சத்துக்கு மேல் ஆண்டு சந்தா செலுத்துபவர்களது கணக்குகளுக்கு வருமான வரி சட்டத்தின்படி வரி விதிக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்தும் வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!