அக்டோபர் 1 முதல் புதிய கல்வி அமர்வுகள் தொடக்கம் – யுஜிசி வழிகாட்டுதல்கள் வெளியீடு!!

0
அக்டோபர் 1 முதல் புதிய கல்வி அமர்வுகள் தொடக்கம் - யுஜிசி வழிகாட்டுதல்கள் வெளியீடு!!
அக்டோபர் 1 முதல் புதிய கல்வி அமர்வுகள் தொடக்கம் - யுஜிசி வழிகாட்டுதல்கள் வெளியீடு!!
அக்டோபர் 1 முதல் புதிய கல்வி அமர்வுகள் தொடக்கம் – யுஜிசி வழிகாட்டுதல்கள் வெளியீடு!!

பல்கலைக்கழக மானியக்குழு 2021-2022ம் ஆண்டுக்கான புதிய கல்வி அமர்வுகள் தொடங்குவது மற்றும் மாணவர் சேர்க்கை தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

யுஜிசி வெளியீடு:

12ம் வகுப்பு இறுதி முடிவுகளை ஒரு சில மாநிலங்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. மற்ற மாநிலங்கள் அனைத்தும் விரைவில் வெளியிட உள்ளது. ஜூலை 31ம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களும் 12ம் வகுப்பு இறுதி முடிவை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ கல்வி வாரியங்களும் தங்களின் இறுதி மதிப்பெண் பட்டியலை ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Wipro IT நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – செப்டம்பர் முதல் அலுவலகம் திறக்கப்பட வாய்ப்பு!

இந்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு புதிய கல்வி அமர்வு, புதிய மாணவர் சேர்க்கை, தேர்வு வழிகாட்டுதல்கள் மற்றும் கல்வி நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. நாட்காட்டியின் படி, பல்கலைக்கழகங்கள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ஆகஸ்ட் 31, 2021 க்குள் முடிக்க வேண்டும். 2021ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் அனைத்து கல்வி வாரியங்கள் முடிவிற்கு பின்னர் தன தொடங்கப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, புதிய கல்வி அமர்வு அக்டோபர் 1,2021 முதல் தொடங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயல்முறை தொடங்கும். செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் சேர்க்கை செயல்முறையை முடித்து, புதிய அமர்வை 2021 அக்டோபர் 1 முதல் தொடங்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடைசி தேதி அக்டோபர் 31 ஆகும். மாணவர் சேர்க்கைக்கான ஆவணங்கள் 2021 டிசம்பர் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here