கொரோனாவுக்கு எதிராக புதிய மருந்து உருவாக்கம் – போர்ச்சுக்கல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!
கொரோனா தொற்று நோய்க்கு எதிராக உலக நாடுகள் பலவும் பல்வேறு வகையான மருந்துகளை தயாரித்துள்ள நிலையில், தற்போது போர்ச்சுக்கலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய 3 வகையான மருந்துகளை கண்டறிந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு மருந்து
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உருவான கொரோனா பேரலை உலக நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வாரிக்கொண்டு போயுள்ளது. இந்த நோய் தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்று கணிக்க முடியாத சூழலில் நோய்க்கு எதிரான மருந்துகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
TNEB கேங்மேன் காலிப்பணியிடங்கள் – கால அவகாசம் நீட்டிப்பு!
இந்நிலையில் கொரோனா வைரஸ் உருவாக்கும் விளைவுகளை தடுக்கும் வகையில் 3 மருந்துகளை உருவாக்கி போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அசத்தியுள்ளனர். அதாவது போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் நோவா பல்கலைக்கழகத்தில், ரசாயன மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 3 மருந்துகளை கலவையாக சேர்க்கும் போது, அவை கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதாக கண்டறிந்துள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
இது தொடர்பாக மருந்து ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான சிசிலியா அர்ரியானோ கூறுகையில், ‘தற்போது கண்டுபிடித்துள்ள கொரோனா வைரசுக்கு எதிரான மருந்துகள் 50% வைரஸ் செயல்பாட்டை குறைக்கிறது. அதாவது இந்த மருந்துகளின் கலவை என்எஸ்பி 14 என்ற வைரஸ் புரதத்தில் செயல்படும். மேலும் நோயாளிகள் மருத்துவமனையில் சேருவதை குறைக்கும்’ என தெரிவித்துள்ளார். தவிர மற்ற 2 மருந்துகள் சந்தை ஒப்புதலுக்காக இருப்பதாக கூறிய அவர் காப்புரிமை காரணமாக மருந்துகளின் பெயரை வெளியிடவில்லை.