தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு TNSED செயலி குறித்த புதிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

0
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு TNSED செயலி குறித்த புதிய உத்தரவு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு TNSED செயலி குறித்த புதிய உத்தரவு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு TNSED செயலி குறித்த புதிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் ஆசிரியர்களின் வருகை பதிவை மேற்கொள்வதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பாக TNSED என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் செயலி மூலம் வருகை பதிவு முறை அமலுக்கு வந்துள்ளது. இதில் தற்போது மாணவர்களின் வளரறி மதிப்பீடு FA (b) பதிவை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

FA (b) மதிப்பீடு:

தமிழகத்தில் கடந்த வருடங்களில் மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்றதால் மாணவர்களிடையே கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கல்விசார் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 1 – 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அனைத்து எண்களையும், எழுத்துக்களையும் முழுமையாக கற்பிக்கும் நோக்கில் எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இத்திட்டத்தின் நோக்கமானது 2025 ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் அடிப்படை கணித திறன்களை வளர்ப்பதும் ஆகும். மேலும் இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் எத்தகைய விளைவுகளை பெற்றுள்ளார்கள் என்பதை வகுப்பாசிரியர் TNSED செயலியில் பதிவிட உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது பள்ளிகளில் மாணவர்களின் கற்றலை கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளின் அடிப்படையில் பள்ளிச்சூழல் மற்றும் வகுப்பறை சூழலில் இருந்து ஆசிரியர் மதிப்பீடு செய்வதே வளரறி மதிப்பீடு FA (b) ஆகும். இதனை எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மதிப்பீட்டு செயலில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ

TNSED செயலில் FA (b) மதிப்பெண் பதிவு முறைகள்:
  • TNSED செயலில் திறந்து அதில் உங்களின் பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல்லை பதிவிட்டு உள்நுழையவும்.
  • அதில் வரும் மெனுவில் FORMATIVE என்பதை கிளிக் செய்து FORMATIVE ‘B’ என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்தாக SELECT TERM , MONTH என்பதை கிளிக் செய்து அதனை தேர்வு செய்ய வேண்டும்.
  • பிறகு மதிப்பெண் அளிக்கக்கூடிய பாடத்தை தேர்ந்தெடுக்கவும். அதனுள் சென்று மாணவர்களின் செயல்பாடுகளை கண்டறிந்து அதனை மதிப்பீடு செய்யவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!