TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டம், தேர்வு மாதிரி வெளியீடு!

0
TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - புதிய பாடத்திட்டம், தேர்வு மாதிரி வெளியீடு!
TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - புதிய பாடத்திட்டம், தேர்வு மாதிரி வெளியீடு!
TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டம், தேர்வு மாதிரி வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் புதிய அரசாணைப்படி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் எப்படி இருக்கும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

TNPSC தேர்வுகள்:

தமிழகத்தில் உள்ள அரசு பணிகளுக்கு தகுதி உடையவர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வாணையம் இந்திய அரசால் அமைக்கப்பட்டது. அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குழு 1, குழு 2, குழு 3 மற்றும் குழு 4 மற்றும் குழு 5,6,7,8 ஆகிய தேர்வுகள் உள்ளன. இந்நிலையில் TNPSC தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்த பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

SSC மற்றும் TNUSRB ஆன்லைன் மாதிரி தேர்வு – தேர்வர்களின் கவனத்திற்கு || முழு விவரம் இதோ!!

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் படி,

  • தமிழ் மொழித் தகுதித் தாள் (Qualifying Paper), தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.
  • தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
  • மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Marks) கட்டாயமாக்கப்படுகிறது. தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள் / தாட்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

தமிழகத்தில் டிச.28ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முழு விபரங்கள் இதோ!

இந்த அரசாணையின் விளைவாக வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அல்லது தமிழ் மொழியில் அடிப்படை புலமை இல்லாதவர்களால், தமிழக அரசுப் பணிகளில் சேர முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் புதிய விதிகளின்படி தேர்வு வினாத்தாள் எப்படி இருக்கும் என விண்ணப்பதாரர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. அது மட்டுமில்லாமல் இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் எப்படி இருக்கும் என அரசுத் தேர்வு ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதனை தொடர்ந்து புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது. அது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள கிழே உள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்

TNPSC Revised Syllabus Download

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!