இந்தியாவின் வட மாநிலங்களில் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – பொதுமக்கள் அச்சம்!

0
இந்தியாவின் வட மாநிலங்களில் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் - பொதுமக்கள் அச்சம்!
இந்தியாவின் வட மாநிலங்களில் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் - பொதுமக்கள் அச்சம்!
இந்தியாவின் வட மாநிலங்களில் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – பொதுமக்கள் அச்சம்!

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. இதனால் பொது மக்கள் ஆழ்ந்த அச்சத்தில் உள்ளனர்.

ஓமைக்ரான்:

இந்தியாவில் கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இந்த வைரஸ் முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த பெங்களூருவை சேர்ந்த 2 நபருக்கு முதலில் ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் அடுத்தடுத்து ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டு வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தமிழ் பாடத்திட்டத்தில் திராவிட சுயமரியாதை இயக்கம்!

மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் ஓமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தடுப்பு பணியாக மாவட்ட நிர்வாகங்கள் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – பொங்கலுக்கு வெளியாகும் அறிவிப்பு!

பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொண்டு வரும் போதிலும் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 34 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவில் 57 பேருக்கும், டெல்லியில் 54 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பு பணியாக வட மாநிலங்களில் ஊரடங்கு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி அவர்கள் நேற்று ஒமைக்ரான் பரவல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here