ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு – புதிய கிரெடிட் கார்டு அறிமுகம்!

0
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு - புதிய கிரெடிட் கார்டு அறிமுகம்!
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு - புதிய கிரெடிட் கார்டு அறிமுகம்!
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு – புதிய கிரெடிட் கார்டு அறிமுகம்!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து துறைகளும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இதையடுத்து தற்போது இந்திய ரயில்வே துறை பயணிகளுக்கு ஒரு சிறப்பான சலுகையை வழங்கியுள்ளது.

ரயில் பயணிகள் கவனத்திற்கு

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில் குறிப்பாக பொதுப்போக்குவரத்தில் ஒன்றான ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் தொற்று பரவல் குறைய தொடங்கியதும் சில சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதையடுத்து தற்போது ரயில்கள் வழக்கம் போல் இயங்கி கொண்டு வருகின்றன. இந்த நிலையில் ஐஆர்சிடிசி என்றழைக்கப்படும் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் இரயில்வே துறையின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

TNPSC Group 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு நடைமுறை, பாடத்திட்ட விபரங்கள் இதோ!

இந்நிறுவனம் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு உணவு வழங்கல், ஆன்லைன் வழியாக டிக்கெட் முன்பதிவு, சுற்றுலா தொடர்பான சேவைகள் உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சிறப்பு சலுகையை பயணிகளுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் தெரிவித்தாவது, IRCTC BoB RuPay contactless credit card என்பதை பயணிகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக ரயில் பயணம் அதிகமாக மேற்கொள்பவர்களுக்கு கட்டணம் குறையும். இந்த கார்டை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்வதால் சில சலுகைகள் பயணிகளுக்கு கிடைக்கிறது.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிப்பு – மார்ச் 1 வரை கால அவகாசம்!

இந்த கார்டை இதர தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும். இதனை பயன்படுத்தி வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் எரிபொருள் உள்ளிட்டவை வாங்கப்படும் போதும் சில சலுகைகளும் கிடைக்கிறது. இந்த கார்டை பயன்படுத்தி ஏசி கோச், எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் புக் மேற்கொள்வதால் 40 ரிவார்டு பாயிண்ட்கள் வரை கிடைக்கிறது. மேலும் எந்தவொரு பயணச்சீட்டு கட்டணத்திற்கு 1% கட்டண விலக்கு வழங்கப்படும். இந்த கிரெடிட் கார்டை தற்போது ஐஆர்சிடிசியில் இணையதளத்தில் பல லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வருவதாகவும் இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!