தமிழகத்தில் தடம் பதித்தது ‘உருமாறிய கொரோனா’ – சென்னையில் ஒருவருக்கு தொற்று உறுதி!!

0
தமிழகத்தில் தடம் பதித்தது 'உருமாறிய கொரோனா' - சென்னையில் ஒருவருக்கு தொற்று உறுதி!!
தமிழகத்தில் தடம் பதித்தது 'உருமாறிய கொரோனா' - சென்னையில் ஒருவருக்கு தொற்று உறுதி!!

தமிழகத்தில் தடம் பதித்தது ‘உருமாறிய கொரோனா’ – சென்னையில் ஒருவருக்கு தொற்று உறுதி!!

இங்கிலாந்தில் தீவிரமாக பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்றால் ஏற்கனவே அங்கிருந்து டெல்லி வந்த 16 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் தொடங்கி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், இங்கிலாந்தில் இருந்து சென்னை திரும்பியவர்களில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

உருமாறிய கொரோனா:

தமிழகத்தில் இதுவரை 8,15,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 12,080 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்தில் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் 70% அதிக வீரியத்துடன் பரவி வருகிறது. இது இளைஞர்களை அதிகமாக தாக்கும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் அந்நாட்டுக்கு விமான சேவையை மத்திய அரசு தடை செய்துள்ளது.

ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு உறுதி – மாநில அரசு திட்டவட்டம்!!

இருப்பினும் ஏற்கனவே அங்கிருந்து திரும்பிய நபர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் பலரும் போலி முகவரியை கொடுத்து விமானத்தில் பயணம் செய்து திரும்பி இருப்பதால் அவர்களை கண்டறியும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய 17 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது.

பொங்கல் பரிசுத்தொகை ரூ.2500 – எந்த ரேஷன் கடையிலும் பெற முடியுமா??

இதனால் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் தனி அறையில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை, இங்கிலாந்தில் இருந்து வந்த 30 பேரின் மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவ அதிக வாய்ப்பில்லை எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!