நாளை மறுநாள் முதல் இரவு ஊரடங்கு அமல், புதிய கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!

0
நாளை மறுநாள் முதல் இரவு ஊரடங்கு அமல், புதிய கட்டுப்பாடுகள் - மாநில அரசு அறிவிப்பு!
நாளை மறுநாள் முதல் இரவு ஊரடங்கு அமல், புதிய கட்டுப்பாடுகள் - மாநில அரசு அறிவிப்பு!
நாளை மறுநாள் முதல் இரவு ஊரடங்கு அமல், புதிய கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!

இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவிலும் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதால் கடுமையான கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

இரவு நேர ஊரடங்கு

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஓமைக்ரான் தொற்று பாதித்த மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.

மாவட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – நாளை கடைசி நாள்!

இந்நிலையில் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது கர்நாடகா மாநிலத்திலும் ஓமைக்ரான் பரவி வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அதன்படி வருகிற 28-ஆம் தேதி முதல் இங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த உள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தில் நடைபெறும் இரவு நேர இசை, கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் முழுமையாக தடை என்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மூடுபனி, வறண்ட வானிலை எச்சரிக்கை – அறிக்கை வெளியீடு!

மேலும் உணவகங்கள், ரெஸ்டாரண்டுகள், கேளிக்கை விடுதிகள் போன்ற இடங்களில் 50% இருக்கைகள் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து இங்கு பிறப்பிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கானது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த இரவு நேர ஊரடங்கு 10 நாட்கள் வரையில் அமலில் இருக்கும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு அரசு அறிவித்த ஊரடங்கு விதிமுறையை பொதுமக்கள் அனைவரும் கட்டாயமான முறையில் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here