தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – பேருந்து சேவைகள் தொடக்கம்!

0
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - பேருந்து சேவைகள் தொடக்கம்!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - பேருந்து சேவைகள் தொடக்கம்!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – பேருந்து சேவைகள் தொடக்கம்!

தமிழகத்தில் வருகிற 28ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டார். இதை அடுத்து புதிய தளர்வாக வகை 3ல் இடம்பெற்றுள்ள 4 மாவட்டங்களுக்கு இடையே நேற்று (ஜூன் 21) முதல் மீண்டும் பேருந்து சேவை தொடங்கியது.

பேருந்து சேவை:

தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வரும் காரணத்தால் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அளித்து ஊரடங்கை நீட்டித்து வருகிறார். தற்போது அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பு அடிப்படையில் 3 வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் முதல் வகையில் பாதிப்புகள் அதிகமாக காணப்படும் கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஜூலை 6 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!

இந்த 11 மாவட்டங்கள் புதிதாக தளர்வுகள் ஏதும் அளிக்கப்படவில்லை. பின் வகை 2ல் 23 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. வகை 3ல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. வகை 2 ல் உள்ள மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் போன்ற குறைந்த அளவிலான தளர்வுகள் அளிக்கப்பட்டன. வகை 3 ல் இடம்பெற்றுள்ள 4 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி இந்த 4 மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று (ஜூன் 21) முதல் இந்த 4 மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. மிக அதிக அளவிலான பயணிகள் ஆர்வமாக பயணம் மேற்கொண்டு வந்தனர். மேலும் இந்த 4 மாவட்டங்களுக்கு இடையே டாக்சி மற்றும் ஆட்டோக்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி இயங்கி வந்தன. அதேபோல் பாதிப்புகள் அதிகமாக காணப்படும் 11 மாவட்டங்களின் எல்லையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!