விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 6’ இல் கலந்து கொள்ளும் முக்கிய போட்டியாளர் – ஜூலை முதல் ஒளிபரப்பு!

0
விஜய் டிவி 'பிக்பாஸ் சீசன் 6' இல் கலந்து கொள்ளும் முக்கிய போட்டியாளர் - ஜூலை முதல் ஒளிபரப்பு!
விஜய் டிவி 'பிக்பாஸ் சீசன் 6' இல் கலந்து கொள்ளும் முக்கிய போட்டியாளர் - ஜூலை முதல் ஒளிபரப்பு!
விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 6’ இல் கலந்து கொள்ளும் முக்கிய போட்டியாளர் – ஜூலை முதல் ஒளிபரப்பு!

விஜய் தொலைக்காட்சி பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இல்லாத வகையில் 2017 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி உலக அளவில் மக்களால் விரும்பி பார்க்கப்பட்டு வந்த பிக்பாஸ் ஷோ தற்போது 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் அடுத்த சீசன் குறித்ததான தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6:

தமிழ் தொலைக்காட்சியில் மற்ற சேனல்களை காட்டிலும் டிஆர்பி ரேட்டிங்கிலும் சரி, மக்களை என்டர்டைன் செய்வதற்காக பல புது புது ரியாலிட்டி ஷோக்களை கொடுப்பதிலும் சரி இவற்றில் எல்லாம் முதல் பங்கு வகிப்பது நமது விஜய் டிவி ஒன்று தான். இந்த சேனலில் ஒளிபரப்பாகிய ஷோக்களில் அதிகளவு நேரம் செலவழித்து விரும்பி பார்த்த ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் ஷோ தான். அந்த அளவுக்கு ஐந்து சீசன்களை கடந்தும் அடுத்தடுத்த சீசனுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் அநேகர்.

தமிழக அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இனி கிடையாது – மாணவர் சேர்க்கை குறைவு!

கடந்த ஐந்து சீசன்களும் அமோக வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது அடுத்த சீசன் எப்போது ஆரம்பிக்கும்? யார் யார் போட்டியாளர்கள்? என ரசிகர்களின் பல கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அட ஆமாங்க! பிக் பாஸ் சீசன் 6 வருகிற ஜூலை மாத இறுதியில் ஆரம்பிக்க உள்ளது என்று முன்னதாகவே பரவி வந்த தகவல் தற்போது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய இந்த ஷோ ஒடிடி தளத்திலும் வெளியிடப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் வருவார் என்று ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அண்மையில் இரண்டாம் திருமணம் செய்த இசை அமைப்பாளர் ஒருவரின் முன்னாள் மனைவி இந்த சீசன் 6-ல் போட்டியாளராக வரலாம் என பேசப்பட்டு வருகிறது. இந்த ஷோவை கடந்தை 5 சீசன்களும் தொகுத்து வழங்கிய கமல் ஹாசன் அவர்கள் இறுதியாக பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் இருந்து அவரது விக்ரம் பட ஷூட்டுக்காக விலகியிருந்தார். ஆனால் தற்போது வரக்கூடிய சீசன் 6-ல் அவரே தொகுப்பாளராக வருவாரா? இல்லையா? என்று அதை குறித்ததான தகவல் ஏதும் இன்னும் வெளிவரவில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here