‘பாக்கியலட்சுமி’ எழில் – அமிர்தா காதலுக்கு வில்லனாக அறிமுகமாகும் நடிகர் சாம்? ரசிகர்கள் ஷாக்!

0
'பாக்கியலட்சுமி' எழில் - அமிர்தா காதலுக்கு வில்லனாக அறிமுகமாகும் நடிகர் சாம்? ரசிகர்கள் ஷாக்!
'பாக்கியலட்சுமி' எழில் - அமிர்தா காதலுக்கு வில்லனாக அறிமுகமாகும் நடிகர் சாம்? ரசிகர்கள் ஷாக்!
‘பாக்கியலட்சுமி’ எழில் – அமிர்தா காதலுக்கு வில்லனாக அறிமுகமாகும் நடிகர் சாம்? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்போது புது அறிமுகமாக நடிகர் சாம் இணைய இருக்கும் நிலையில், இவர் எழில், அமிர்தா காதலை சேர்த்து வைக்கப்போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் சாம்

கலர்ஸ் டிவியின் ‘இதயத்தை திருடாதே’ சீரியல் மூலம் வில்லன் நடிகராக மக்கள் மத்தியில் பரீட்சயமானவர் நடிகர் சாம். ஏற்கனவே சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான ‘தெய்வமகள்’ மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகர் சாமிற்கு, ‘இதயத்தை திருடாதே’ சீரியல் திருப்புமுனையாக அமைந்தது. இந்த சீரியலில் முக்கிய வில்லனாக நடிப்பில் வித்தியாசத்தை காட்டி இருந்த நடிகர் சாம் தற்போது சன் டிவியின் ‘அருவி’ சீரியலில் பாசிட்டிவ் ரோலில் மக்களை மகிழ்வித்து வருகிறார்.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகும் இனியா நேஹா? வெப் தொடர் பிரவேசம்! ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிகர் சாம் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிகர் சாம் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிப்ரவரி 5 முதல் ஒளிபரப்பாகும் என்றும் தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இப்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராமமூர்த்தி வாய் பேச முடியாமல் இருக்க, அவரை கவனிப்பதில் மொத்த குடும்பமும் ஈடுபட்டு வருகிறது.

இந்த கதைக்களத்தில் எதற்காக புதிய என்ட்ரி என யோசிக்கும் போது, ஒருவேளை எழில் – அமிர்தா காதல் கதையில் நடிகர் சாம் ஒரு முக்கிய திருப்பமாக அமைவார் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீண்ட நாட்களாக காட்டப்படாமல் இருந்து வரும் எழில் – அமிர்தா காதல் கதைக்கு வில்லனாக அல்லது நண்பராக நடிகர் சாம் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, எழிலை காதலிக்கவில்லை என்று அமிர்தா மறுத்து வரும் நிலையில், எழிலின் குடும்பத்தை பற்றி யோசித்து அமிர்தாவை எழிலுக்கு திருமணம் செய்து கொடுக்க அவரது அப்பாவும், அம்மாவும் தயங்குகின்றனர்.

பாரதி பற்றிய உண்மையை சொல்லப்போகும் கண்ணம்மா – பிறந்தநாள் விழாவில் வரப்போகும் ட்விஸ்ட்!

இப்போது, அமிர்தாவின் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் சிக்கலை தீர்த்து வைத்து, எழில் – அமிர்தாவின் காதல் கதைக்கு உதவும் நண்பர் ரோலில் சாம் என்ட்ரி கொடுக்கலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. இல்லையெனில் அவர் வில்லனாக கூட அறிமுகமாகலாம். என்றாலும் சாம் நடிக்க இருக்கும் கதாப்பாத்திரம் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், இவரின் வருகை ‘பாக்கியலட்சுமி’ சீரியலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!