Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – புதிய மாற்றங்கள் அறிவிப்பு!

0
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - புதிய மாற்றங்கள் அறிவிப்பு!
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - புதிய மாற்றங்கள் அறிவிப்பு!
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – புதிய மாற்றங்கள் அறிவிப்பு!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இது தொடர்பான தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சேமிப்பு கணக்கு

இந்திய தபால் துறையில் உள்ள சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் அதிகளவு இணைகின்றனர். ஏனெனில் இதில் முதலீடு செய்வதால் அதிக லாபமும் பாதுகாப்பும் கிடைக்கிறது. அத்துடன் வங்கிகளில் கிடைக்கும் வட்டி தொகையை விட இரண்டு மடங்காக பெற முடிகிறது. அத்துடன் இந்த சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் முதலீடு செய்வதால் சாதாரண மக்கள் மத்தியில் இந்த சேமிப்பு திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி அஞ்சல் துறை பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது.

SBI SCO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

இதில் தெரிவித்தாவது, அஞ்சல் அலுவலகத்தில் சாதாரண சேமிப்பு கணக்கு முதல் எந்தவிதமான கணக்கு வைத்தவர்களும் தங்கள் சேமிப்பு கணக்குடன் பான் எண், மொபைல் நம்பரை இணைக்க வேண்டும். இதையடுத்து ரூ.50000 மேற்பட்ட பணப் பரிவர்த்தனையின் போது பான் கார்டை சரிபார்க்க வேண்டும். மேலும் அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்கள் சேமிப்பு கணக்கை முடிக்கும் நிலையில் கணக்கு புத்தகத்தை கட்டாயமாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் கடைசியாக வரவு வைக்கப்பட்ட பரிவர்த்தனை பற்றிய விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இதனை தொடர்ந்து அஞ்சல் அலுவலகத்தில் ரூ.20,000க்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனையின் போது ஒவ்வொரு முறையும் மொபைல் எண்ணை சரிபார்க்கப்பட வேண்டும். அத்துடன் பான் கார்டு இல்லாத வாடிக்கையாளர்களிடம் படிவம் 60/61 என்பதை பெற வேண்டும். அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு வைத்துள்ளவர்களின் கேஒய்சி ஆவணங்களை அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 1800 266 6868 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு இலவச உதவி மையத்தை அணுகி பெற்று கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!