சுங்க கட்டணம் செலுத்துவதில் புதிய மாற்றம் – போக்குவரத்து துறை அமைச்சர் முக்கிய தகவல்!!

0
சுங்க கட்டணம் செலுத்துவதில் புதிய மாற்றம் - போக்குவரத்து துறை அமைச்சர் முக்கிய தகவல்!!

செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண வரியை அறிமுகம் செய்ய மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சுங்க கட்டணம்:

இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கட்டாயமாக சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் நின்று அதற்கான கட்டணத்தை வாகன ஓட்டிகள் செலுத்துவதற்கு பதிலாக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலமாக அதாவது செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண வரியை அறிமுகம் செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!! 

இந்நிலையில், ஒவ்வொரு பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றம் செய்யப்பட்டு ஓட்டுநர்கள் தாங்கள் பயணத்திற்கு பயணிக்கும் தூரத்திற்கு மட்டுமே செயற்கைக்கோள் அடிப்படையான கட்டண வரி மூலமாக சுங்கவரி செலுத்த வேண்டும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளின் வங்கி கணக்கில் இருந்தே அதற்கான தொகை பிடித்தம் செய்யப்படும்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!