புதிதாக கார் வாங்கிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமா – வைரலாகும் வீடியோ! குவியும் லைக்குகள்!

0
புதிதாக கார் வாங்கிய
புதிதாக கார் வாங்கிய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" மீனா ஹேமா - வைரலாகும் வீடியோ! குவியும் லைக்குகள்!
புதிதாக கார் வாங்கிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமா – வைரலாகும் வீடியோ! குவியும் லைக்குகள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நகைச்சுவை வில்லியாக கலக்கி வரும் நடிகை ஹேமா சதீஸ் தற்போது தனது குடும்பத்துடன் சென்று புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை ஹேமா சதீஸ்:

தமிழ் சின்னத்திரையில் குடும்ப சீரியல்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றனர். அந்த சீரியல்களில் அன்றாட குடும்பங்களின் கதையை மையமாக வைத்து காட்சிகள் எடுக்கப்படுவது தான் கூடுதல் சிறப்பாக இருக்கிறது. அந்த வகையில் கூட்டு குடும்பத்தின் பந்த பாசத்தை பற்றி சொல்லும் சீரியல் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. அண்ணன் தம்பிகள் என நான்கு பேரும் வாழ்க்கையில் ஒற்றுமையாக இருப்பது மட்டுமே கதையின் மையக் கருத்தாக இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இந்த சீரியலில் வில்லன், வில்லி என எந்த காதாபாத்திரமும் தனிப்பட்டு இல்லை. மேலும் மீனா கதாபாத்திரத்தில் நடிகை ஹேமா சதீஸ் நடித்து வரும் நிலையில், வில்லி இல்லாத குறைக்கு அவ்வப்போது ஹேமா தான் வில்லத்தனம் செய்து வருகிறார். அதனால் அவருக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றனர். மீனா கதாபத்திரம் நல்லவரா, கெட்டவரா என குழப்பத்திலேயே ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர். நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருந்த ஹேமா சீரியலில் தொடர்ந்து நடிப்பது பலரது பாராட்டுகளை பெற்றது.

வடிவேல் பாலாஜியின் பிறந்தநாளில் கண்கலங்கிய விஜய் டிவி புகழ் – ரசிகர்கள் உருக்கம்!

அந்த வகையில் சீரியல் மட்டுமில்லாமல் ஹேமாவின் யூடுப் வீடியோஸ் பார்க்கவும் தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் ஹேமா தனது குடும்பத்துடன் புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. விஜய் டிவி பிரபலங்கள் பலர் புதிதாக கார் வாங்கி இருக்கும் செய்தி அடிக்கடி கேள்விபடும் நிலையில் தற்போது அந்த வரிசையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா இணைந்து இருக்கிறார். அதனால் ரசிகர்கள் வாழ்த்துக்களை லைக்குகளாக பதிவிட்டு வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!