IPL 2022 : பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
IPL 2022 : பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம் - ரசிகர்கள் உற்சாகம்!
IPL 2022 : பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம் - ரசிகர்கள் உற்சாகம்!
IPL 2022 : பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம் – ரசிகர்கள் உற்சாகம்!

கடந்த 2021ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக பதவி வகித்த கேஎல் ராகுல் தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இடம் மாறி இருப்பதால், இந்த னியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ்

வரும் மார்ச் மாதம் 26ம் தேதியுடன் துவங்க இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சீசனில் 10 அணிகள் கலந்து கொள்ள இருக்கிறது. கடந்த 14 சீசன்களாக நடத்தப்பட்ட IPL போட்டிகளில் களம் கண்டு வந்த 8 நட்சத்திர அணிகளுடன் இந்த முறை குஜராத் லயன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட 2 புதிய அணிகள் இணைந்திருக்கிறது. இப்போது குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக, மும்பை அணியில் இடம்பிடித்திருந்த ஹர்திக் பாண்ட்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் தற்போது லக்னோ அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

PF அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மாற்றம் செய்வது எப்படி?

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவி காலியாக இருந்த நிலையில், அந்த அணியின் துணைக் கேப்டனாக பணியாற்றி வந்த மயங்க் அகர்வால் தற்போது கேப்டன் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த சீசனில் ராகுல் இல்லாத சமயங்களில் அணியை சிறிப்பாக வழிநடத்தி இருந்த மயங்க் அகர்வால் தற்போது அணியின் கேப்டன் பொறுப்பை வகித்துள்ளார். அதே நேரத்தில் 2022 IPL மெகா ஏலத்திற்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளரால் தக்கவைக்கப்பட்ட இரண்டு வீரர்களில் மயங்க் அகர்வால் முக்கியமான ஒருவர் ஆவார்.

இப்போது கேப்டன் பொறுப்பு குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறுகையில், ‘கடந்த 2018ம் ஆண்டு முதல் பஞ்சாப் அணியிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமைக் குழுவிலும் ஒரு அங்கமாக இருந்து வருகிறார் மயங்க் அகர்வால். சமீபத்தில் முடிவடைந்த ஏலத்தில் புதிய அணியைத் தேர்ந்தெடுத்தோம். அற்புதமான இளம் திறமைகள் மற்றும் சிறந்த அனுபவம் வாய்ந்த வீரர்களை பஞ்சாப் கொண்டுள்ளது. இப்பொது மயங்க் அகர்வால் தலைமையில் எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க விரும்புகிறோம். அவர் ஒரு கடின உழைப்பாளி.

ஒரு தலைவருக்குத் தேவையான அனைத்து பண்புகளையும் கொண்ட ஒரு அணி வீரர். அவருடன் கேப்டனாக பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர் சிறப்பாக அணியை வழிநடத்துவார் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2011ல் அறிமுகமான மயங்க் அகர்வால், இதுவரை சுமார் 100 IPL போட்டிகளில் விளையாடிய முதல் முறையாக ஒரு அணியின் கேப்டனாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி உயர்வு குறித்து மயங்க் அகர்வால் கூறுகையில், ‘நான் 2018 முதல் பஞ்சாப் கிங்ஸில் இருந்து வருகிறேன்.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு – அப்ரூவல் வாங்குவது எப்படி?

இந்த அருமையான யூனிட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அணியை வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பொறுப்பை மிகுந்த நேர்மையுடன் நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் சில அனுபவமிக்க வீரர்கள் உள்ளனர். அவர்களுடன் பல திறமையான இளைஞர்கள் வாய்ப்பைப் பெற ஆர்வமாக உள்ளனர். நாங்கள் பட்டத்தை வெல்வோம் என்ற நம்பிக்கையில் களத்தில் இறங்கியுள்ளோம். ஒரு அணியாக நாங்கள் மீண்டும் செயல்படுவோம். இந்த சீசனில் எங்கள் இலக்கு முதல் IPL கோப்பையை வெல்வது’ என்று உற்சாகமாக குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!