விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் புதிய பாக்கியாவாக களமிறங்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியலில் புதிய பாக்கியாவாக களமிறங்கும் பிரபல நடிகை - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் புதிய பாக்கியாவாக களமிறங்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் இல்லத்தரசிகளின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பாக்கியலட்சுமி கதாபாத்திரம் மாற்றப்பட்டு அதில் பிரபல நடிகை ஒருவர் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல்:

பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பல முக்கிய நடிகர் நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கதையின் ஆணி வேராக பாக்கியலட்சுமி கதாபாத்திரம் இருக்கிறது. அதில் கன்னட சீரியல் நடிகை சுஜிதா என்பவர் நடித்து வருகிறார். இல்லத்தரசிகளின் பிரதிபலிப்பாக இருக்கும் பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதா தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பலரது மனதை கவர்ந்து இருக்கிறார்.

மார்ச் 1 முதல் 6-12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாவட்ட நிர்வாகம் அனுமதி!

இந்நிலையில் பாக்கியா கதாபாத்திரம் குடும்ப தலைவியாக மட்டுமல்லாமல், நல்ல ஒரு அம்மாவாகவும், நல்ல மனைவியாகவும், நல்ல மருமகளாகவும், நல்ல மாமியாராக கூட காட்டப்படுகிறது. சின்னத்திரையில் இப்படி ஒரு கதாபாத்திரம் இதுவரை காட்டப்பட்டது இல்லை. மேலும் நடுவே சில சமூக விழிப்புணர்வு காட்சிகளை கதையில் கொண்டு வருவதால் பல தரப்பினரும் பாக்கியாவிற்கு ரசிகர்களாக இருக்கின்றனர். தற்போது வெளியான செய்தியின் படி பாக்கியா கதாபாத்திரம் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த மீனா ஹேமா – சூரத் பயணம்!

பாக்கியாவாக நடிகை ராதிகா களமிறங்க இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராதிகா சித்தி, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் இது போல கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் அவர் இந்த கதாபாத்திரத்தில் பொருத்தமாக இருப்பார் என ரசிகர்கள் நினைத்தாலும், சுசித்ரா இந்த ரோலில் பொருந்திவிட்டதால் அவர் மாறுவதாக வெளியான செய்தியை கேட்டு ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!