PM கிசான் திட்ட விவசாயிகள் கவனத்திற்கு – 15வது தவணை பெற உடனே இதை செய்யவும்!!
PM கிசான் திட்டத்தின் கீழ் 15 வது தவணைக்கான பணத்தை பெற சில வழிமுறைகளை பின்பற்றும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
PM கிசான் திட்டம்:
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ. 2000 வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே ரூ. 6000 வரைக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரைக்கும், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக 14 தவணைக்கான நிதியுதவி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விட்டது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!
இந்நிலையில், 15 ஆவது தவணைக்கான பணம் இந்த மாதத்தின் இறுதியில் வரவு வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 15ஆவது தவணையை பெற விரும்பும் விவசாயிகள் கட்டாயமாக e-KYC செயல்முறையை செய்திருக்க வேண்டும். முதலில், PM கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ போர்ட்டலுக்கு சென்று டாஷ்போர்டில் உங்களது முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பின்னர், உங்களின் மாவட்டம், பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்தையும் தேர்வு செய்து e-KYC செயல்முறையை முடிக்கவும்.