ATM பண பரிவர்த்தனை கட்டணம் உயர்வு – ஜன.1 முதல் அமல்! ரிசர்வ் வங்கி அனுமதி!

0
ATM பண பரிவர்த்தனை கட்டணம் உயர்வு - ஜன.1 முதல் அமல்! ரிசர்வ் வங்கி அனுமதி!
ATM பண பரிவர்த்தனை கட்டணம் உயர்வு - ஜன.1 முதல் அமல்! ரிசர்வ் வங்கி அனுமதி!
ATM பண பரிவர்த்தனை கட்டணம் உயர்வு – ஜன.1 முதல் அமல்! ரிசர்வ் வங்கி அனுமதி!

வங்கி ATM களில் பண பரிவர்த்தனை செய்வதற்கான கட்டணத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அதன்படி பண பரிவர்த்தனை கட்டண உயர்வானது வரும் ஜன.1 அதாவது புத்தாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பண பரிவர்த்தனை கட்டணம்:

நாம் அனைவரும் வங்கி கணக்கில் வைத்துள்ள பணத்தை பெரும்பாலும் Debit கார்டு பயன்படுத்தி ATM மூலம் பண பரிவர்த்தனை செய்து வருகிறோம். இந்த பண பரிவர்த்தனையானது கணக்கு வைத்துள்ள வங்கியின் ATM மற்றும் பிற வங்கி ATM என மாதத்திற்கு குறிப்பிட்ட வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வரம்பை கடந்து விட்டால் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் ATM எந்திரங்களில் பணத்தை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்காக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ரேஷன் கார்டில் புதிய நபரை ஆன்லைனில் இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அவ்வாறு ATM எந்திரங்களில் பணத்தை நிரப்புவது உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளதால் கடந்த ஜூன் மாதம் மத்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களின் ATM பண பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்தது. அதன்படி அனைத்து வங்கிகளும் இதுவரை 20 ரூபாயாக இருந்த பண பரிவர்த்தனை கட்டணத்தை 21 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அதாவது அந்தந்த வங்கி ATM களில் மாதத்திற்கு 5 முறையும், பிற வங்கி ATM என்றால் மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறையும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம்.

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு – தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு! அரசாணை வெளியீடு!

இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை மீறும் பட்சத்தில் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களது நிதி செலவுகளை திட்டமிட்டு அதற்கு ஏற்றவாறு நிர்ணயிக்கப்பட்ட வரம்பில் பணம் எடுத்து வந்தால் கூடுதல் கட்டணங்களை தவிர்க்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வானது வரும் ஜன.1ம் தேதி அதாவது புத்தாண்டு முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here