சென்னையில் 300 இடங்களில் புதிய ஏற்பாடு – வாகன நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு!

0
சென்னையில் 300 இடங்களில் புதிய ஏற்பாடு - வாகன நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு!
சென்னையில் 300 இடங்களில் புதிய ஏற்பாடு - வாகன நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு!
சென்னையில் 300 இடங்களில் புதிய ஏற்பாடு – வாகன நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு!

சென்னை நகரில் அதிக அளவு வாகன போக்குவரத்து காரணமாக ஏற்படும் வாகன நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஏற்பாடு:

தமிழக தலைநகர் சென்னையில் மக்கள் அதிக அளவு தனிநபர் வாகன போக்குவரத்தை மேற்கொள்வதால் அங்கு முக்கிய சாலைகளில் எப்போதுமே அதிக கூட நெரிசல் இருந்து வரும். இந்த வாகன நெரிசல் வார இறுதி மற்றும் முக்கிய தினங்களில் சமாளிக்க முடியாத வகையில் உள்ளது. இதற்காக போக்குவரத்து காவல் துறையினர் மாற்று சாலைகளில் வாகனங்களை மாற்றி விடுவார்கள். இந்நிலையில், சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் மாநகராட்சி Live Traffic Monitor சிஸ்டம் என்ற புதிய திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

10,11,12ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் – ஜன.5 முதல் 7 வரை சிறப்பு கட்டணம்!!

Follow our Instagram for more Latest Updates

இந்த புதிய திட்டத்தின் மூலம் காவல் துறையினர் நகரின் வாகன போக்குவரத்து நெரிசலை தொழில்நுட்ப ரீதியாக நேரலையில் கையாள முடியும். மேலும், அவசர கால தேவைகளின் போதும், முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாற்று பாதை குறித்த ஏற்பாடுகளை செய்ய முடியும். குறிப்பாக, 5 நிமிடங்களுக்கு ஒரு முறை நகரில் ட்ராபிக் நிலவரத்தை அறிவிக்கும். இதன் மூலம் டிராபிக் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, பிற்கால தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

காவல்துறையினரை போலவே, பொதுமக்களும் இந்த திட்டத்தின் மூலம் அதிக ட்ராபிக் ஆன சாலைகள், மாற்று பாதை அறிவிப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், Live Traffic Monitor சிஸ்டம் திட்டம் சென்னையின் முக்கிய 300 இடங்களில் 1 கோடி செலவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!