ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – IRCTC புதிய செயலி அறிமுகம்!

0
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - IRCTC புதிய செயலி அறிமுகம்!
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - IRCTC புதிய செயலி அறிமுகம்!
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – IRCTC புதிய செயலி அறிமுகம்!

IRCTC அமைப்பு, ரயில் பயணிகள் தட்கல் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயணம் செய்வோர் டிக்கெட் எளிதாக எந்தவிதமான சிரமும் இன்றி பெற முடியும். இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

புதிய செயலி அறிமுகம்:

இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமான IRCTC, ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கல், சுற்றுலா மேலாண்மை மற்றும் இணையவழி பயணச்சீட்டு பதிவு ஆகிய சேவைகளை மேற்கொள்கிறது. இந்த நிலையில் IRCTC, தட்கல் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு வசதியான வழியை அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்களின் எதிர்பாராத பயணத்திற்கு ,ரயிலில் டிக்கெட் கிடைக்காத சூழலில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி இருக்கிறது.

YouTube, Google மூலம் ரஷ்ய நிறுவனங்களுக்கு கிடைத்த வருவாய் நிறுத்தம் – உக்ரைனுக்கு ஆதரவாக நடவடிக்கை!

இருப்பினும் தட்கல் முறையில் பயணிகள் டிக்கெட்டையும் எளிதாக பெற முடியாது, ஏனென்றால் சில வினாடிகளில் டிக்கெட் வேகமாக நிரம்பி விடும் என்பதாகும். இந்த மாதிரியான சூழ்நிலைகளை தவிர்க்கும் விதமாக, IRCTC அறிமுகபடுத்திய புதிய வழி “கன்ஃபார்ம்டிக்கெட்” (Confirm ticket) என்ற செயலி ஆகும். இந்த மொபைல் செயலி, தட்கல் புக்கிங் வசதிக்காக மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் தட்கல் நேரத்தில் பதற்றத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்யாமல் இந்த செயலியில் மிகவும் ரிலாக்ஸாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

1.இந்த செயலி மூலம் பயணிகள், தாங்கள் பயணம் செய்யும் நகரத்துக்கு எத்தனை ரயில்கள் செல்கின்றன மற்றும் ரயிலில் எத்தனை பெட்டிகள், அதில் காலியாக இருக்கும் இருக்கை, படுக்கை விவரங்களை அறிய முடியும்.

2.மேலும் இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம், மேலும் தட்கல் முன்பதிவு செய்து அதில் பயணிக்க முடியாமல் டிக்கெட்டை CANCEL செய்தால், அதற்கு கட்டணம் இல்லை.

மாநிலத்தில் மீண்டும் இரவு ஊரடங்கு அமல்? முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் – அரசின் அறிவிப்புகள்!

3.ரயிலில் காலி இடத்தைப் பொறுத்தே தட்கல் முன்பதிவு செய்ய முடியும். ஒருவேளை டிக்கெட் முன்பதிவில் கட்டணமும் செலுத்தியபின் காத்திருப்பு பட்டியலில் வந்தால், டிக்கெட் ஏதேனும் ரத்தானவுடன் தானாகவே உறுதியாகும்.

4.இந்த செயலி மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்தால், தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here