தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான புதிய செயலி – ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான புதிய செயலி - ஆட்சியர் அறிவிப்பு!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான புதிய செயலி - ஆட்சியர் அறிவிப்பு!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான புதிய செயலி – ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காகவே TN SPORTS என்கிற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த் புதிய செயலி மூலமாக என்னென்ன பலன்களை பெற முடியும் என்பதற்கான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TN SPORTS செயலி

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்குவது போல விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக TN SPORTS என்கிற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த செயலியின் மூலமாகவே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் போட்டிகளின் விவரங்கள், பயிற்சி முகாம் குறித்தான விவரங்கள், விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டு விவரங்கள் என விளையாட்டு தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – ‘இதை’ செய்தால் நடவடிக்கை!

மேலும், TN SPORTS செயலி மூலமாகவே விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்கள் அதற்கான சான்றிதழ்களை digilocker மூலமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களையும் பெற மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் முன்பாகவே தங்களது விவரங்கள் அனைத்தையும் TN SPORTS செயலியில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனையடுத்து, TN SPORTS செயலியில் இணைய விரும்பும் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருமே https://www.tnsports.org.in/webapp/login.aspx என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், விளையாட்டு கழக அணிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே இந்த முகவரி பக்கத்தில் விவரங்களை பதிவு செய்து பயன்பெறும்படி மயிலாடுதுறை ஆட்சித்தலைவர் லலிதா தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!