Maruti Suzuki வாகனங்களின் விலை அதிரடி உயர்வு – புதிய அறிவிப்பு!

0
Maruti Suzuki வாகனங்களின் விலை அதிரடி உயர்வு - புதிய அறிவிப்பு!
Maruti Suzuki வாகனங்களின் விலை அதிரடி உயர்வு - புதிய அறிவிப்பு!
Maruti Suzuki வாகனங்களின் விலை அதிரடி உயர்வு – புதிய அறிவிப்பு!

இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, தற்போது வாகனங்களின் விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் விலை குறித்த எவ்வித விளக்கங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

விலை உயர்வு

சமீப காலமாக இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதாவது வாகனங்களின் பாகங்களை தயாரிக்கும் பொருட்களின் விலையேற்றம் இதற்கு காரணமாக கூறப்பட்டது. இதனால் பண்டிகை காலங்களில் அறிவிக்கப்படும் வாகன தள்ளுபடிகள் கூட பெருமளவு குறைந்துள்ளது. இதனிடையே கொரோனா நோய் தொற்று காலத்தில் ஏற்பட்ட சப்ளை பற்றாக்குறையால் இந்த ஆண்டு, வாகனங்களின் மீதான பண்டிகை கால தள்ளுபடிகளும் குறைந்துள்ளது. அதனால் இனி வாங்கும் புதிய வாகனத்திற்கு வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

வெளிநாடுகளில் மாதம் ரூ.2.5 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்புகள் – நிறுவன இயக்குனர் அறிவிப்பு!

இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, உள்ளீட்டு விலை நிர்ணயம் காரணமாக அதன் தயாரிப்புகளில் விலை உயர்வை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வாகனங்களின் விலை அதிகரிப்பு தொடர்பான எங்கள் முந்தைய தகவல்களை குறிப்பிடுகையில், மாருதி நிறுவனத்தின் பல்வேறு உள்ளீட்டு செலவுகளின் அதிகரிப்பு காரணமாக கடந்த வருடத்தில் வாகனங்களின் விலை தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்டது என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.

TN Job “FB  Group” Join Now

எனவே, விலை உயர்வு கட்டாயமாகிவிட்டது’ என குறிப்பிட்டுள்ளது. இந்த விலை உயர்வின் அளவு இன்னும் மாருதி சுசுகியால் வரையறுக்கப்படவில்லை. அதே சமயம் விலை உயர்வு குறித்து நிபுணர்கள் கூறுகையில், ‘விலை உயர்வு, குறிப்பாக ஹேட்ச்பேக்கின் மலிவு திறனை பாதிக்கிறது. இருப்பினும் சரக்கு கட்டணம் மற்றும் மூலப்பொருட்களின் அதிகரிப்பை பார்த்தாலும், விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிறது. இது தேவையை பாதிக்கும்’ என குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே இந்தியாவில் வாகன எரிபொருள்களின் விலையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது பயனர்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!