ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரம் இதோ!

0
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு - முழு விவரம் இதோ!
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு - முழு விவரம் இதோ!
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரம் இதோ!

இந்தியாவில் அதிகளவில் மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து துறைகளில் ரயில்வே துறை முன்னணியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வது குறித்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரயில் கட்டணம்:

இந்தியாவில் உள்ள போக்குவரத்தில் ரயில் போக்குவரத்து அதிக மக்களால் பயன்படுத்தப்படும் துறையாக விளங்குகிறது. குறிப்பாக நடுத்தர மக்களுக்கு இந்த சேவை அதிகம் பயன்பட்டு வருகிறது. ஏன்னென்றால் பேருந்து கட்டணங்களை காட்டிலும் ரயில்களில் உள்ள கட்டணம் குறைவாக இருப்பதால் மக்கள் அதிகம் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த ரயில் சேவையில் பயணிகளுக்கு ஏற்றவாறு அனைத்து வசதிகளும் செய்யப்படுவதால் மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் – உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

இதையடுத்து பண்டிகை மக்களின் வசதிகளுக்கு ஏற்ப சிறப்பு ரயில் சேவைகளையும் இயக்கி வருகிறது. மேலும் இதில் முன்பதிவு சேவைகள் இருப்பதால் மக்கள் தங்கள் வசதிகளுக்கு ஏற்ப டிக்கெட் கட்டணங்களை செலுத்தி கொள்ளலாம். அதுமட்டுமின்றி நீண்ட தூர பயணங்களுக்கு குறைவான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் கோடிக்கணக்கான மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, ரயில் சேவையில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டால் அதற்கு கேன்சலேஷன் கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்த கட்டணங்களுடன் தற்போது ஜி.எஸ்.டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பர்ஸ்ட் கிளாஸ் ஏ/சி வகுப்பில் புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட் 48 மணி நேரத்திற்குள் செய்யப்பட்டால் வழக்கமாக பிடிக்கப்படும் ரூ.240 உடன் 5% ஜி.எஸ்.டி வரி சேர்த்து ரூ. 252 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் செகண்ட் கிளாஸ் ஏ/சி என்றால் ரூ.200+ 5% என்றும், மூன்றாம் வகுப்பு ஏ/சி என்றால் ரூ.180+5% ஜி.எஸ்.டி வரி சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செகண்ட் ஸ்லீப்பர் மற்றும் இருக்கை வகுப்புகளுக்கு டிக்கெட் ரத்து செய்தால் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here