தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கூட்டுறவு சங்கம் ஆணை!!
ரேஷன் கடைக்கு வரும் பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக கூட்டுறவு சங்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரேஷன் கடை:
தமிழக ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பெரும்பாலான ரேஷன் கடைகளில் சரியான எடையில் ரேஷன் பொருள் வழங்குவதில்லை என ரேஷன் கடை ஊழியர்களுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பை கூட்டுறவு சங்கம் வெளியிட்டுள்ளது.
BSNLன் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அதாவது, ரேஷன் வாங்க வரும் பொது மக்களிடம் ஊழியர்கள் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், ரேஷன் கடைகளின் சுற்றுப்புறத்தை ஊழியர்கள் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், தரமற்ற ரேஷன் பொருட்களை அல்லது எடை குறைவான பொருட்களை ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க கூடாது எனவும், ரேஷன் கார்டுதாரர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் எனவும் கூட்டுறவு சங்கம் அறிவுறுத்தியுள்ளது.