தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் அனுமதி – தேவஸ்தானம் அதிரடி உத்தரவு!

0
தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் அனுமதி - தேவஸ்தானம் அதிரடி உத்தரவு!
தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் அனுமதி - தேவஸ்தானம் அதிரடி உத்தரவு!
தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் அனுமதி – தேவஸ்தானம் அதிரடி உத்தரவு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே அனுமதி மற்றும் சிபாரிசு கடிதம் வைத்திருப்பவருக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் அனுமதி கிடையாது என தேவஸ்தானம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில்:

இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக மத சார்பு தொடர்பான அனைத்து கோவில்களும் மூடப்பட்டிருந்தது. சற்று கொரோனாவின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்ததும் சிறு சிறு கோவில்கள் திறக்கப்பட்டன. தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேவஸ்தான அறங்காவலர் குழு நிறுவனத்தினர்கள் இந்த கோவிலின் விதிமுறைகள் பலவற்றை மாற்றி அமைத்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் தரிசன டிக்கெட்டின் விலையையும் உயர்த்தியுள்ளனர்.

உக்ரைனில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம் – இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை தீவிரம்!

நீண்ட நாட்களுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஒரு நாளில் மட்டுமே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். தற்போது இந்த சுவாமி தரிசன டிக்கெட் வைத்திருந்தால் மட்டுமே அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஒரு புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஏழுமலையான் கோவிலில் ஒரு நாளுக்கு மட்டுமே 3000 இலவச டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இலவச தரிசனத்திற்காக நேரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் சிபாரிசு கடிதங்களுடன் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் கவனத்திற்கு – இன்று பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை!

பக்தர்கள் தனக்கு ஒதுக்கப்பட்ட தேதிகளில் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய முடியும். அந்த தேதியில் வரமுடியாத பக்தர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி கிடையாது என தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அலிபிரி சோதனைச்சாவடியிலிருந்து அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படும் மற்றும் அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் அறைகள் இல்லை என்பதால் பக்தர்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் சமுதாய கூடத்தில் அல்லது தேவஸ்தானத்தின் லாக்கர்களில் வைத்துவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!