விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அறிமுகமாகும் புதிய அஞ்சலி – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் தற்போது ஹேமா பற்றிய உண்மை கண்ணம்மா பாரதிக்கு சொல்ல இருக்கிறார். இந்நிலையில் அஞ்சலி கதாபாத்திரம் மாற்றப்பட்டு வேறொரு நடிகை அஞ்சலியாக களமிறங்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா ப்ரோமோ:
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அதிரடி காட்சிகள் வர இருக்கிறது. கண்ணம்மாவின் பிறந்தநாளில் லக்ஷ்மிக்கு அவருடைய அப்பா யார் என்ற உண்மையை சொல்ல போவதாக சொல்ல அதை நினைத்து லட்சுமி பல கனவுகளுடன் இருக்கிறார். கண்ணம்மா இரண்டு முறை பாரதியை வர சொல்ல ஆனால் பாரதி வருவதாக தெரியவில்லை. இந்நிலையில் கண்ணம்மா பாரதியிடம் சென்று உங்களிடம் ஒரு ரகசியம் சொல்ல இருப்பதாக சொல்கிறார். அது பற்றி பாரதி தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அபிநய் & சினேகன் – ரசிகர்கள் ஷாக்!
இன்றைய எபிசோடில் பாரதி கண்ணம்மா பிறந்தநாள் விழாவிற்கு வராமல் தப்பிக்க ஹைதராபாத் செல்ல முடிவு செய்துள்ளார். ஆனால் ஹேமா வர முடியாது என சொல்ல பாரதி கோவமாக இருக்கிறார். இந்நிலையில் சௌந்தர்யா பாரதி வருவானா என நினைத்து கவலையில் இருக்கிறார். கண்ணம்மா பாரதியை பார்க்க மருத்துவமனைக்கு செல்ல, மறுபக்கம் லட்சுமி கண்ணம்மாவின் அப்பாவிடம் பல கேள்விகளை கேட்கிறார்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலை நிஜம் என நம்பி ரசிகைகள் செய்த செயல் – ஷாக்கான எழில்!
இப்படி பரபரப்பாக எபிசோட் சென்று கொண்டிருக்க,லட்சுமிக்கு உண்மை தெரிய வருமா என்ற எதிர்பார்ப்புடன் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கண்மணி சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக இன்னும் மற்றொரு நடிகை ரீபிளேஸ் செய்யப்படவில்லை. தற்போது அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அஞ்சலியாக மற்றொரு நடிகை களமிறங்கி இருக்கிறார். ஆனால் அது வெறும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ என்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.