‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பாவிற்கு ஜோடியாகும் பிரபல நடிகர் – சூடுபிடிக்கும் சீரியல்!

0
'பாரதி கண்ணம்மா' வில்லி வெண்பாவிற்கு ஜோடியாகும் பிரபல நடிகர் - சூடுபிடிக்கும் சீரியல்!
'பாரதி கண்ணம்மா' வில்லி வெண்பாவிற்கு ஜோடியாகும் பிரபல நடிகர் - சூடுபிடிக்கும் சீரியல்!
‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பாவிற்கு ஜோடியாகும் பிரபல நடிகர் – சூடுபிடிக்கும் சீரியல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. அந்த வரிசையில் அதிக பார்வையாளர்களையும் அதற்கு சமமான விமர்சனங்களையும் பெற்று ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் தற்போது புது திருப்பங்களுக்கு மாற்றாக புது வருகையாக சில நடிகர்கள் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்கள்.

பாரதி கண்ணம்மா:

சமீப காலமாக டிஆர்பி ரேட்டிங்கில் தவறாது முதல் ஐந்துக்குள்ளாவது இடம் பெற்று வந்த பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது டல் அடித்து கொண்டு நகர்கிறது. அதாவது ஆரம்ப காலத்தில் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் எப்படி விமர்சனங்களோடு கூடிய ரீச் பெற்றதோ அது போலவே தொடர்ந்து ஒவ்வொரு கட்சிகளும் நெட்டிசன்களுக்கு தவறாமல் வேலை கொடுத்து விடுகிறது. சமையல் காரியாக இருந்து குழந்தையுடன் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்த கண்ணம்மா சூரிய வம்சம் தேவயானி போல் சட்டுனு ஒரு பெரிய மருத்துவமனைக்கு ஏஓ போல் மாறிவிட்டார்.

பாக்கியவிடம் கோபி பற்றிய உண்மைகளை கூறும் ராதிகா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ட்விஸ்ட்!

பாரதியை உயிருக்கு உயிராய் காதலித்து அவன் கண்ணம்மாவுக்கு கணவன் ஆகிய பிறகும் பல சதிகளை செய்து பிரிக்க நினைத்த வில்லி வெண்பா, தற்போது தன்னுடைய திருமணத்தை தடுக்க முடியாதவளாக காமெடி பீஸ் போல் மாறியிருப்பதில் லாஜிக்கே இல்லை. சரி, குழந்தைகள் ஹேமா மற்றும் லட்சுமிக்கு தன்னுடைய அம்மா அப்பா யாரென உண்மை தெரிய வந்தால் ஒரு விடிவுகாலம் பிறக்கும் என நினைத்த போதிலும் பாரதி, கண்ணம்மாவை விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கிறார். இதை தெரிந்துகொண்ட லட்சுமியும் என்ன செய்வதென தெரியாமல் இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் தற்போது எதோ புது வருகை கொடுத்தால் தொடர் சூடுபிடிக்கும் என இயக்குனர் நினைத்தாரோ? என்னவோ? வெண்பாவை காதலிக்கும் ஒருவராக புது நபர் சீரியலுக்கு வரவிருவிருக்கிறார். அது வேற யாரும் இல்லை அனைவரும் அறிந்த முகமாகிய வேலைக்காரன் சீரியலில் லீட் ரோலில் நடித்தவர் தான். ஆனால் இவர் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறாரா அல்லது வெண்பாவிற்கு ஜோடியாக வர போகிறவர் இவர் தானா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதை வைத்தாவது சீரியல் மீண்டும் விறுவிறுப்பாக நகரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!