சன், விஜய் டிவி சீரியல்களை கலாய்க்கும் நெட்டிசன்கள் – வைரலாகும் மீம்ஸ்!

0
சன், விஜய் டிவி சீரியல்களை கலாய்க்கும் நெட்டிசன்கள் - வைரலாகும் மீம்ஸ்!
சன், விஜய் டிவி சீரியல்களை கலாய்க்கும் நெட்டிசன்கள் - வைரலாகும் மீம்ஸ்!
சன், விஜய் டிவி சீரியல்களை கலாய்க்கும் நெட்டிசன்கள் – வைரலாகும் மீம்ஸ்!

சன், விஜய் டிவி ஆகிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை கலாய்த்து நெட்டிசன்கள் பலரும் மீம் கிரியேட் செய்து அனைவரையும் கவர்ந்து வருகின்றனர். தற்போது சமூக வலைதள பக்கங்கள் எங்கிலும் இது போன்ற மீம்கள் தான் வலம் வந்து கொண்டிருக்கிறது.

தொலைக்காட்சி சீரியல்கள்:

விஜய், சன் டிவி மற்றும் ஜீ தமிழ் முதலிய தொலைக்காட்சி தொடர்களை தான் மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தான் அந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்கின்றனர். இந்த சீரியலை வைத்து நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து மீம் கிரியேட் செய்து மக்களை மகிழ்வித்து வருகின்றனர். பெரும்பாலும் இந்த சீரியல்கள் அனைத்தும் அடுத்த குடும்பத்தை கெடுப்பது எப்படி என்பது போல தான் காட்டப்பட்டு வருகிறது. அதையும் விடாமல் மக்கள் நாள் முழுக்க கண்டு ரசித்து கொண்டிருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

அதாவது இந்த தொலைக்காட்சி சீரியல்களில் நடக்கும் நிகழ்ச்சியை ஏதோ ஒரு படத்துடன் ஒப்பிட்டு காமெடியாக மீம் கிரியேட் செய்து வருகின்றனர். அதிலும் பாக்கியலட்சுமி சீரியலை வைத்து தான் அதிக அளவில் மீம்கள் கிரியேட் செய்யப்படுகிறது. மேலும் சீரியல்களை விட மக்கள் அதிகமாக இது போன்ற மீம்களை தான் ரசித்து கொண்டிருக்கின்றனர். கோபி பாக்கியாவிடமும் மாட்டாமல் ராதிகாவிடமும் மாட்டாமல் தவிப்பது, ராதிகா வீட்டிற்கு வரும் போது ராதிகாவை பார்க்க முடியாமல் கோபி தவிப்பது என அனைத்தையும் வைத்து மிக அற்புதமாக எடிட் செய்து மீம்களை ஷேர் செய்து கொண்டிருக்கின்றனர்.

குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள ‘ராஜா ராணி 2’ சீரியல் ஆலியா மானசா – ஐலா பாப்பாவின் வீடியோ வைரல்!

மக்கள் பலரும் இது போன்ற காமெடி கலந்த மீம்களை தான் விரும்புவதால் நெட்டிசன்கள் பலரும் இந்த வேலையாகவே அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும், சமூக வலைதள பக்கங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போனை கையில் வைத்துக் கொண்டு இது போன்ற மீம்களை கண்டு ரசித்து ஷேர் செய்கின்றனர். இதனால் சீரியலில் என்ன நடக்கிறது என்கிற அப்டேட்டையும் இந்த மீம்கள் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!