Netflix சந்தாதாரர்கள் வெளியான ஷாக்கிங் நியூஸ்.. இனி இதற்கும் கட்டணம் – ஏப்ரல் முதல் அமல்!

0
Netflix சந்தாதாரர்கள் வெளியான ஷாக்கிங் நியூஸ்.. இனி இதற்கும் கட்டணம் - ஏப்ரல் முதல் அமல்!
Netflix சந்தாதாரர்கள் வெளியான ஷாக்கிங் நியூஸ்.. இனி இதற்கும் கட்டணம் - ஏப்ரல் முதல் அமல்!
Netflix சந்தாதாரர்கள் வெளியான ஷாக்கிங் நியூஸ்.. இனி இதற்கும் கட்டணம் – ஏப்ரல் முதல் அமல்!

உலகம் முழுவதும் பல மில்லியன் கணக்கான Netflix சந்தாதாரர்கள் தங்களின் கணக்கின் பாஸ்வேர்டை அவர்களின் குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். இதனால் இந்நிறுவனத்திற்கு நிதி வருவாய் குறைவதால், தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பாஸ்வேர்ட் பகிர்வு குடும்பங்கள்:

உலகம் முழுவதும் Netflix தளத்திற்கு 200 மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நெட்ப்ளக்ஸின் தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் சேவைக்கு பணம் செலுத்தாமல் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு பயனர்கள் தங்கள் கணக்கின் பாஸ்வேர்டை பகிர்ந்துள்ளது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மக்களுக்கு பீதி அளிக்கும் தங்கம் விலை.. சவரன் ரூ.256 உயர்வு – இன்றைய நிலவரம் உள்ளே!

இதனால் இந்நிறுவனத்திற்கு நிதி வருவாய் குறைந்துள்ளது. மேலும் இவ்வாறு அங்கீகரிக்கப்படாத பயனர்களின் கணக்குகளை முடக்க இந்நிறுவனம் கடந்த ஆண்டு முதல் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாஸ்வேர்ட் பகிர்வுக்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க தொடங்கும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அதன்படி பாஸ்போர்ட் பகிர்ந்து கொள்ளும் சந்தாதாரர்களிடமிருந்து வருகிற ஏப்ரல் மாதம் முதல் ரூபாய் 250 கட்டணம் வசூலிக்கப்படும் என்று Netflix நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் பாஸ்வேர்ட் பகிர்வு வெகுவாக குறையும் என்றும், பாஸ்வேர்ட் பகிர்வு படிப்படியாக தடை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!