TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – எதற்கெல்லாம் நெகட்டிவ் மார்க்?

0
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - எதற்கெல்லாம் நெகட்டிவ் மார்க்?
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - எதற்கெல்லாம் நெகட்டிவ் மார்க்?
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – எதற்கெல்லாம் நெகட்டிவ் மார்க்?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வருகிற மே 21ம் தேதி அன்று குரூப் 2, 2ஏ தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் தேர்வு நடத்துவதற்குரிய முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தற்போது TNPSC தேர்விலும் நெகட்டிவ் மார்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது எதற்கெல்லாம் நெகட்டிவ் மார்க் என்பதை விரிவாக பார்ப்போம்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் மூலமாக அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து வருகிற மே 21ம் தேதி அன்று குரூப் 2, 2ஏ பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 5529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது இணையதளத்தில் கடந்த வாரம் வெளியிட்டது.

தமிழக அரசின் பேருந்து பயண டிக்கெட் கட்டண விலை உயர்வு – அமைச்சர் ஷாக் அறிவிப்பு!

இதனை பெற விரும்பும் தேர்வர்கள் http://tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தங்களின் OTR கணக்கு மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதையடுத்து குரூப் 2, 2ஏ தேர்வில் நெகட்டிவ் மார்க் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இது தேர்வர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது எதற்கெல்லாம் நெகட்டிவ் மார்க் வழங்கப்படும் என்பதை விரிவாக பார்ப்போம். இதனை குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

TNPSC தேர்வாணையம் “நெகட்டிவ் மார்க்” குறித்து தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,

Exams Daily Mobile App Download

1. குரூப் 2 தேர்வில் ஏதேனும் ஒரு கேள்விக்கு விடைக்குறிப்பை தேர்வு செய்யாமல் காலியாக விட்டிருந்தால் நீங்கள் எடுத்த மொத்த மதிப்பெண்ணில் இருந்து 2 மதிப்பெண் கழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2. தேர்வர்களின் தங்களின் விடைத்தாளில் ஏதேனும் தவறான விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை மாற்றி மற்றொரு விடைத்தாளை பெற்று கொள்ளலாம். ஆனால் இந்த விடைத்தாளில் பதிவு எண்ணை தவறாக நிரப்பினால் தேர்வரின் மொத்த மதிப்பெண்ணில் இருந்து 2 மதிப்பெண் கழிக்கப்படும்.

3. மொத்த கேள்விகளுக்குமான விடைக்குறிப்பை சரியான முறையில் Shading செய்யவில்லையெனில் இதற்கும் 2 மதிப்பெண் கழிக்கப்படும்.

4. வினா தொகுப்பு புத்தகத்தின் எண்ணை சரியாக குறிப்பிடாமலோ அல்லது விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக எழுதாமலோ இருந்தால் 5 மதிப்பெண் கழிக்கப்படும்.

5. கை ரேகை குறிப்பிடப்படும் இடங்களில் வைக்காமல் இருந்தால் 2 மதிப்பெண் கழிக்கப்படும்.

6. ஏதேனும் ஒரு கேள்விக்கு விடைக்குறிப்பை தேர்வு செய்யாமல் காலியாக விட்டால் 2 மதிப்பெண் கழிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!