NEET UG | இளங்கலை நீட் தேர்வு எழுத இருப்போர் கவனத்திற்கு – புதிய வழிமுறைகள் இதோ!

0
NEET UG | இளங்கலை நீட் தேர்வு எழுத இருப்போர் கவனத்திற்கு - புதிய வழிமுறைகள் இதோ!
NEET UG | இளங்கலை நீட் தேர்வு எழுத இருப்போர் கவனத்திற்கு - புதிய வழிமுறைகள் இதோ!
NEET UG | இளங்கலை நீட் தேர்வு எழுத இருப்போர் கவனத்திற்கு – புதிய வழிமுறைகள் இதோ!

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. தற்போது இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு மையம் அமைந்துள்ள நகரத்தின் தகவலை கண்டறிய நகர ஒதுக்கீடு சீட்டை தேசிய தேர்வு முகமை வாரியம் வெளியிட்டுள்ளது. இதனை பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

தேர்வர்கள் கவனத்திற்கு

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக இத்தேர்வில் 200 வினாக்கள் கேட்கப்படுகிறது. மேலும், இத்தேர்வு 3 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை நடைபெறும். நீட் தேர்வு இந்தியாவில் சுமார் 543 நகரங்களிலும் மற்றும் இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நடத்தப்படுகிறது. தற்போது இந்த ஆண்டு 18 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் NEET UGக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நடப்பு ஆண்டில் இத்தேர்வு வருகிற ஜூலை 17ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனால், நீட் தேர்வுக்குரிய நுழைவு சீட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்வு மையத்தின் நகரத்தை அறியும் வகையில் என்டிஏ மேம்பட்ட தகவல் சீட்டை தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, இதில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் நகரம், தேர்வு மையம் உள்ளிட்ட தகவல்கள் மட்டும் இடம் பெற்றிருக்கும். மேலும் இது அட்மிட் கார்டு அல்ல என்பதை விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்பும் நபர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 01140759000 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

தமிழக 11ம் வகுப்பு கணினி அறிவியல் மாணவர்கள் கவனத்திற்கு – கட்டணம் குறித்த அறிவிப்பு!

தேர்வு நகரச் சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்:

1. முதலில் விண்ணப்பதாரர்கள் neet.nta.nic.in. என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இதன் முகப்பு பக்கத்தில் ‘Advance Intimation of Examination City for NEET(UG)-2022’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது புதிய பக்கம் தோன்றும். இதில் உங்களின் விண்ணப்ப எண் மற்றும் தனிநபர் விவரங்களை உள்ளிட வேண்டும்.

4. இப்போது உங்களின் திரையில் NEET UG தேர்வு நகரச் சீட்டு காண்பிக்கப்படும்.

5. இதனை பதிவிறக்கம் செய்ய “NEET UG 2022 நகர அறிவிப்பு சீட்டு” என்ற நேரடி லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!