NEET UG தேர்விற்கான விடைக்குறிப்பு – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்!

0
NEET UG தேர்விற்கான விடைக்குறிப்பு - பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்!
NEET UG தேர்விற்கான விடைக்குறிப்பு - பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்!
NEET UG தேர்விற்கான விடைக்குறிப்பு – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்!

NEET UG தேர்விற்கான விடைக்குறிப்பு மற்றும் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என தேர்வாளர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும், விடைக்குறிப்பை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது தொடர்பான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NEET UG தேர்வு:

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) ஒவ்வொரு ஆண்டும் தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. விண்ணப்பித்திருந்த மாணவர்களில் 95% மாணவர்கள் இந்தாண்டிற்கான நீட் தேர்வில் கலந்துகொண்டனர். அதாவது, 18 லட்சம் பேர் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான தேர்வை கிட்டத்தட்ட 543 நகரங்களில் 3,800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் எழுதினர்.

TNPSC அறிவித்துள்ள இராணுவ கல்லூரி மாணவர் சேர்க்கை – முக்கிய தகவல் வெளியீடு!

இந்நிலையில், நீட் தேர்விற்கான விடைக்குறிப்புகள் மற்றும் தேர்வு முடிவினை எதிர்பார்த்து மாணவர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்தாண்டு நீட் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வாளர்கள் தெரிவித்திருந்தனர். தற்போது வரைக்குமே விடைக்குறிப்பு மற்றும் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு தற்போது வரைக்கும் வெளியாகவில்லை. மேலும், NEET தேர்வாளர்கள் neet.nta.nic.in மற்றும் nta.ac.in என்கிற இணையதள முகவரி பக்கத்தின் மூலமாக விடை குறிப்பை அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், விடைக்குறிப்புகள் வெளியிட்ட பிறகு அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் ஆன்லைன் வழியாக ரூ.200 கட்டணம் செலுத்தி அந்த பதிலை மாற்றம் செய்வதற்கான வேலையை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எப்படி NEET UG 2022 தேர்விற்கான விடைக்குறிப்பை தெரிந்துகொள்வது என்பதை பார்க்கலாம். முதலில், neet.nta.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று NEET தேர்வின் விண்ணப்ப எண், பிறந்த தேதி, கடவுச்சொல் ஆகியவற்றை பதிவு செய்து விடைக்குறிப்பை அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!