NEET PG Counselling 2ம் சுற்று இட ஒதுக்கீடு முடிவுகள் – இன்று வெளியீடு!
மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) NEET PG 2023 கவுன்சிலிங்கிற்கான 2ம் சுற்று இட ஒதுக்கீட்டை இன்று வெளியிட உள்ளது. விண்ணப்பதாரர்கள் mcc.nic.in என்ற இணையதளத்தில் தங்களின் ஒதுக்கீட்டு முடிவைச் சரிபார்த்து கொள்ளலாம்.
நீட் முதுகலை கவுன்சிலிங் 2023:
மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி (MCC) NEET PG 2023 கவுன்சிலிங்கிற்கான 2வது சுற்று இட ஒதுக்கீட்டை இன்று ஆகஸ்ட் 28 அன்று வெளியிட உள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கான இரண்டாவது சுற்று கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்கள் இட ஒதுக்கீட்டு முடிவைப் mec.nic.in இல் சரிபார்க்கலாம்.
இரண்டாம் சுற்றில் தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட இடங்களைப் பெற்ற விண்ணப்பதாரர்கள், ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 05, 2023 வரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி அல்லது நிறுவனத்தில் அறிக்கை செய்து சேர்க்கையை உறுதிசெய்ய வேண்டும். இரண்டாவது சுற்றில் சீட் ஒதுக்கப்பட்டவர்கள் ஆவணப் பதிவேற்றம் செய்யும் பணியை நிறைவேற்ற ஆகஸ்ட் 29-ம் தேதி ஒரு நாள் அவகாசம் வழங்கப்படும்.
DFCCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் முறைகள் உள்ளே!
இரண்டாவது சுற்றில் வெற்றிகரமான இடத்தைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், கவுன்சிலிங் நடைமுறையைத் தொடர விருப்பம் தெரிவித்து, 3வது சுற்றில் கலந்து கொண்டு தங்கள் விருப்பங்களை மேம்படுத்திக்கொள்ளலாம். நீட் முதுகலை கலந்தாய்வு மூன்றாம் சுற்று செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 13, 2023 அன்று முடிவடைய உள்ளது.