NEET UG 2022 தேர்விற்கான முடிவு எப்போது? அறிவிப்பு வெளியீடு!

0
NEET UG 2022 தேர்விற்கான முடிவு எப்போது? அறிவிப்பு வெளியீடு!
NEET UG 2022 தேர்விற்கான முடிவு எப்போது? அறிவிப்பு வெளியீடு!
NEET UG 2022 தேர்விற்கான முடிவு எப்போது? அறிவிப்பு வெளியீடு!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், NEET UG தேர்விற்கான முடிவு எப்போது என்பது குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவினை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவு:

நாடு முழுவதும் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான NEET தேர்வு கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. கிட்டத்தட்ட 18 லட்சம் பேர் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை எழுதினர். மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விற்கான விடைக்குறிப்பும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், NEET UG 2022 தேர்விற்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

நாடு முழுவதும் மொத்தமாக 497 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. ஏற்கனவே, ஆகஸ்ட் மாதத்தின் இறுதிக்குள் கண்டிப்பாக நீட் தேர்வு 2022 முடிவுகள் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை NTA அறிவித்திருந்தது. இந்நிலையில், எப்படியும் இந்த வாரத்திற்குள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீட் UG தேர்விற்கான முடிவினை தேர்வாளர்கள் NEETன் அதிகாரபூர்வமான இணையதள முகவரியான neet.nta.nic.in என்கிற பக்கத்திற்குள் சென்று பார்த்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பமாகும் வெண்பா, பாரதிதான் தந்தையா ? அதிரடி திருப்பங்கள்!

தற்போது எப்படி NEET UG 2022 தேர்விற்கான முடிவுகளை தெரிந்து கொள்வது என்பதை பார்க்கலாம். முதலில், அதிகாரபூர்வமான இணையதள முகவரியான neet.nta.nic.in என்கிற பக்கத்திற்கு சென்று அதன் முகப்பு பக்கத்தில் உள்ள NEET UG RESULT 2022 என்கிற பகுதியை கிளிக் செய்யவும். இதனை கிளிக் செய்ததும் புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்து சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், உங்களது இளங்கலை நீட் தேர்விற்கான மதிப்பெண் காண்பிக்கப்படும். அந்த மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!