NEET SS 2022 கலந்தாய்வின் முதல் சுற்று: Seat allotment நாளை தொடக்கம் – முடிவுகள் எப்போது?

0
NEET SS 2022 கலந்தாய்வின் முதல் சுற்று: Seat allotment நாளை தொடக்கம் - முடிவுகள் எப்போது?
NEET SS 2022 கலந்தாய்வின் முதல் சுற்று: Seat allotment நாளை தொடக்கம் - முடிவுகள் எப்போது?
NEET SS 2022 கலந்தாய்வின் முதல் சுற்று: Seat allotment நாளை தொடக்கம் – முடிவுகள் எப்போது?

மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET SS) 2022 கலந்தாய்வின் முதல் சுற்றிற்கான விண்ணப்பிப்பதற்கான பதிவுகள் இன்றுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து இதற்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து பார்ப்போம்.

தேர்வு முடிவுகள்

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இதன் முடிவுகள் கடந்த செப்டம்பரில் வெளியானது. இதையடுத்து தற்போது NEET SS (D.M/ M.CH & DNBSS) படிப்பிற்கான கலந்தாய்வின் முதல் சுற்றிற்கு விண்ணப்பிக்க நவம்பர் 22ம் தேதி முதல் 28ம் தேதி மதியம் 12 மணி அளவில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதன்படி இன்றுடன் இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைகிறது. இதையடுத்து 2ம் சுற்று கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 9ம் தேதி முதல் 14ம் தேதி மதியம் 12 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது முதல் சுற்றிற்கான முடிவுகள் டிசம்பர் 1ம் தேதி அன்றும் 2ம் சுற்றிற்கான தேர்வு முடிவுகள் வருகிற டிசம்பர் 17ம் தேதி அன்றும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

UPSC CISF AC LDCE 2023 தேர்வுக்கான அறிவிப்பு – விரைவில் விண்ணப்பபதிவு தொடக்கம்!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து முதல் சுற்றுக்கான seat allotment நாளையும் (நவ.29), நாளை மறுநாளும் (நவ.30) நடைபெறுகிறது. இதே போல் 2ம் சுற்றிக்கான seat allotment டிசம்பர் 15,16ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் மற்றும் 2ம் சுற்றிற்கான முடிவுகளை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://mcc.nic.in/ என்ற இணையதளத்தின் மூலமாக சரிபார்த்து கொள்ளலாம் என அறிவுறுத்தபப்டுகிறார்கள்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!