NEET தேர்வு முடிவுகள் வெளியீடு – அமைச்சர் முக்கிய வேண்டுகோள்!

0
NEET தேர்வு முடிவுகள் வெளியீடு - அமைச்சர் முக்கிய வேண்டுகோள்!
NEET தேர்வு முடிவுகள் வெளியீடு - அமைச்சர் முக்கிய வேண்டுகோள்!
NEET தேர்வு முடிவுகள் வெளியீடு – அமைச்சர் முக்கிய வேண்டுகோள்!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில் முடிவுகளை பொறுத்து குழந்தைகளை ஆசிரியர்கள் திட்டுவதோ கடிந்து கொள்வதோ கூடாது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

நீட் தேர்வு:

இந்தியாவில் மருத்துவப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நீட் தேர்வில் நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் அதில் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் மட்டுமே எழுதினார்கள். அதற்காக மொத்தம் 497 நகரங்களில் இந்த தேர்வானது நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது

மேலும் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார்கள். ஜூலை மாதம் 17 ஆம் தேதி இந்த தேர்வானது நடந்து முடிந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாவதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மாணவ மாணவிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று (செப். 7) வெளியானது. மாணவ மாணவிகள் neet.nta.nic.in என்ற இணையதளப் பக்கத்தில் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

கர்நாடக அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 7வது ஊதிய குழு அமல்!

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவ மாணவிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வது வழக்கமான செய்தியாக மாறிவிட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும், மதிப்பெண் குறைந்ததால் திட்டவோ, கடிந்து கொள்ளவோ கூடாது எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் நீட் தேர்வை விலக்க அரசு போராடி வருவதாக தெரிவித்தார். இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதியதால் அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டார்கள் என்ற அர்த்தமில்லை எனவும், வேறு வழி இல்லாமல் தான் அவர்கள் நீட் தேர்வு எழுதியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!