நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியீடு – தமிழக அரசு பள்ளி மாணவி முதலிடம்! ஆசிரியர்கள் பாராட்டு!

0
நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியீடு - தமிழக அரசு பள்ளி மாணவி முதலிடம்! ஆசிரியர்கள் பாராட்டு!
நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியீடு - தமிழக அரசு பள்ளி மாணவி முதலிடம்! ஆசிரியர்கள் பாராட்டு!
நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியீடு – தமிழக அரசு பள்ளி மாணவி முதலிடம்! ஆசிரியர்கள் பாராட்டு!

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கியது. ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தற்போது விண்ணப்பித்தோர்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இதன் விவரங்களை இப்பதிவில் காண்போம்.

தரவரிசை பட்டியல்:

நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 2022ம் ஆண்டுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த தேர்வின் முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் மாநில மருத்துவ கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க தொடங்கினர். மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த செப்டம்பர் 12ம் தேதி தொடங்கியது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

சுமார் 36,100 பேர் மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். இந்த நிலையில் இன்று மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை வெளியாகி உள்ளது. இப்பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வெளியிட்டார். அதில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கவுந்தப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற தேவதர்ஷினி என்ற மாணவி நீட் தேர்வு இட ஒதுக்கீட்டில் 518 மதிப்பெண்கள் பெற்று தமிழக தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க புதிய நடைமுறை – அமைச்சர் தொடக்கம்!

Exams Daily Mobile App Download

அம்மாணவிக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும், சக மாணவிகளும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த தரவரிசை பட்டியலில் தேசிய ஒதுக்கீட்டு இடங்கள் போக மீதமுள்ள 7,377 இடங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 558 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக கலந்தாய்வு அக். 19ம் தேதி முதல் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!