‘நீட்’ தேர்வு தள்ளி வைப்பு? டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை!

0
'நீட்' தேர்வு தள்ளி வைப்பு? டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை!
'நீட்' தேர்வு தள்ளி வைப்பு? டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை!
‘நீட்’ தேர்வு தள்ளி வைப்பு? டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை!

நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இருக்கும் மையங்களில் நீட் தேர்வு வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ‘நீட்’ தேர்வை தள்ளிவைக்க கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

தேர்வு தள்ளி வைப்பு:

நாடு முழுவதும் MBBS , BDS போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு வரும் ஜூலை 17-ந்தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. நீட் தேர்வு நடைபெறும் நேரத்தில் பல்வேறு தேர்வுகள் நடப்பதால் நீட் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாணவர்கள் பலர் ஒருவரே பல தேர்வுகளை எழுத முயற்சி மேற்கொள்வதால் சிரமம் ஏற்படும். எனவே நீட் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

TN Job “FB  Group” Join Now

இருப்பினும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்க தேசிய தேர்வு முகமை மறுத்துவிட்டது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வு ஜூலை 17-ந்தேதி திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு நீட்த் தேர்வு இந்தி , தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறுகின்றது. வரும் 17ம் தேதி நடக்கவுள்ள தேர்விற்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு? ஜூலையில் அறிவிப்பு!

இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் அனுபவா ஸ்ரீவாஸ்தவா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் பல்வேறு மாநிலங்களில் தற்போது பெய்து வரும் பருவமழை, மிகவும் தொலைவில் உள்ள ‘நீட்’ தேர்வு மையங்களை கருத்தில்கொண்டு, ஜூலை 17-ந் தேதி நடைபெற உள்ள ‘நீட்’ இளநிலை தேர்வை தள்ளி வைக்க வேண்டும். இத்தேர்வில் பங்கேற்க மேலும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு முன் வக்கீல் மம்தா சர்மா முறையிட்டார். அந்த முறையீட்டை பரிசீலித்த ஐகோர்ட், இன்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!