NEET PG கவுன்சிலிங்கிற்கான இட ஒதுக்கீடு முடிவு நாளை வெளியீடு – MCC அறிவிப்பு!
NEET PG கவுன்சிலிங்கிற்கான மூன்றாம் சுற்றிற்கான ஒதுக்கீடு முடிவு நாளை வெளியிடப்படும் என மருத்துவ ஆலோசனைக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
NEET PG இட ஒதுக்கீடு முடிவு:
மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முதுகலை (NEET PG) கவுன்சிலிங்கிற்கான இட ஒதுக்கீடு முடிவை நாளை வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், NEET PG கவுன்சிலிங்கிற்கான மூன்றாம் இருக்கை செயலாக்கம் இன்று நிறைவடையும் நிலையில் விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, விண்ணப்பதாரர்கள் இட ஒதுக்கீடு முடிவை மருத்துவ ஆலோசனைக் குழுவின் இணையதள பக்கமான mcc.nic.in என்கிற பக்கத்தில் அறிந்துகொள்ளலாம்.
TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு பணி நியமன ஆணை – 10,205 பேருக்கு முதல்வர் வழங்கல்!
தற்போது எப்படி NEET PG கவுன்சிலிங் 2023 மூன்றாம் சுற்றிற்கான ஒதுக்கீடு முடிவை சரிபார்ப்பது என்பதை பார்க்கலாம். முதலில், mcc.nic.in என்கிற பக்கத்திற்கு சென்று முகப்புப் பக்கத்தில் தென்படும் “பிஜி மருத்துவம்” என்பதை கிளிக் செய்யவும். இதன் பின்னர், முடிவு இணைப்பைக் கிளிக் செய்து NEET முதுகலை இட ஒதுக்கீட்டிற்கான முடிவை அறிந்து கொள்ளலாம். மேலும், தேவைப்படும் பட்சத்தில் ஒதுக்கீடு முடிவினை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.